சுகாதாரத் துறைக்கு எதிர்ப்பு: சர்கார் போஸ்டரை ப்ரொபைல் பிக்சராக வைத்த விஜய் ரசிகர்கள் | Health department notice against Sarkar irks Vijay fans

0
0

சென்னை: விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்குமாறு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஒரு காரியம் செய்துள்ளார்கள்.

படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதுடன், படத்தில் யாராவது புகைப்பிடித்தாலும் அறிவுரை வழங்குபவர் விஜய். இந்நிலையில் அவர் நடித்து வரும் சர்கார் பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போஸ்டரை பார்த்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும், மேலும் அவர் புகைப்பிடிப்பது போன்று இருக்கும் போஸ்டரை சமூக வலைதளங்கள், இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து சர்கார் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. விஜய் அண்ணா போஸ் கொடுத்ததை பார்த்து தான் மக்கள் கெட்டுவிடுவார்களா என்று அவரின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக எந்த போஸ்டரை சுகாதாரத் துறை நீக்குமாறு கூறியதோ அதே போஸ்டரை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தங்களின் ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.