சீனாவில் இதற்கெல்லாம் தடை தெரியுமா? | Things That Banned in China

0
0

ஹிப்- ஹாப் :

ஹிப் ஹாப் பாடல்கள், ஹிப் ஹாப் பாட்டு பாடும் கலைஞர்கள் ஆகியோருக்கு சீனாவில் தடை. இவர்கள் எப்போது புரட்சியாக பேசுவார்கள் என்பதாலும் சீனாவை ஆளும் அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் என்பதாலும் இந்த தடை.

இந்த தடையை ஏற்படுத்திய ஒரு வாரத்தில் சீனாவைச் சேர்ந்த இரண்டு ஹிப் ஹாப் கலைஞர்கள் அரசங்கத்தின் இந்த போக்கை கண்டித்து காட்டமான பாடலை பாடினர்.

Image Courtesy

டைம் ட்ராவல் :

டைம் ட்ராவல் :

திரைப்படங்கள் குறிப்பாக ஹாலிவுட்டில் நேரத்தை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ பயணிப்பது போல காட்சிபடுத்துவது சீனாவில் தடை. இந்த தடை மிகவும் அவசியம் ஏனென்றால் டைம் ட்ராவல் என்ற பெயரில் செல்பவர்கள் வரலாற்றை திரித்து சொல்லிவிடுகிறார்கள் சீனாவின் பாரம்பரியத்தையே அது குலைத்துவிடும் என்றார்கள்.

சீனாவில் டைம் ட்ராவல் குறித்தான திரைப்படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு அவை மக்கள் மத்தியில் ஏக பிரபலம் ஆன காலகட்டத்தில் தான் அரசாங்கம் இதை தடை செய்தது. தடை செய்யப்பட்ட ஆண்டு 2011.

Image Courtesy

வதந்தி :

வதந்தி :

2017 ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி திடீரென்று சீனாவில் மக்கள் பயன்படுத்துகிற சமூகவலைதளங்கள், வலைதளங்கள்,ப்ளாக் ஆகியவற்றிலிருந்து சீனாவின் பிரபலங்கள் பற்றி இருந்த வதந்திகள் எல்லாம் திடீரென்று காணமல் போயின. பின்னர் அது அரசாங்கத்தின் ஆணை என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சீனாவில் செயல்படுகிற இணையதள ஒழுங்குமுறை நிறுவனத்தை அழைத்து சுமார் 60 ப்ளாக்குகளின் பட்டியலையும் ஏராளமான சமூகவலைதள பக்கத்தின் பட்டியலையும் கொடுத்து அவை உடனடியாக முடக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பிரபலங்கள் குறித்த வதந்திகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்.

மறுபிறவி :

மறுபிறவி :

நம் வீடுகளில் எல்லாம் இந்த வசனங்களை நிறையவே கேட்டிருப்போம் புதிதாக பிறந்த குழந்தைகள் தங்களது தாய் தந்தையராகவோ அல்லது மறைந்த அந்த வீட்டு பெரியவர்களின் மறுபிறப்பாகவே பார்ப்பார்கள். அப்பிடியே எங்கம்மா தான் எனக்கு மகளா வந்திருக்கா என்று சொல்லி பூரிப்படைவார்கள். சீன அரசாங்கம் இதற்கும் தடை விதித்திருக்கிறது.

இல்லை நான் கண்டிப்பாக மறுபிறவி பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினால அதற்குரிய காரணத்தை சொல்லி அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

வார்த்தை விளையாட்டு :

வார்த்தை விளையாட்டு :

இதை இங்கே புதிர் விளையாட்டாக விளையாடுவோம். அதாவது ஒரே வார்த்தை அல்லது உச்சரிப்பதில் ஒரே மாதிரியாக இருக்கும் வார்த்தைகள் பயன்படுத்த சீனாவில் தடை. ஏனென்றால் சீன மொழி, எழுத்து ஆகியவற்றில் இந்த குழப்பங்களை ஆரம்ப நிலையிலேயே சீர்படுத்த வேண்டும் என்பதால் தான் இந்த தடையாம்.

இது போன்ற வார்த்தைகளால் சீனாவில் இருக்கும் குழந்தைகள் தான் அதிக குழப்பமடைகிறார்களாம்.

ஏற்றுக்கொள்ள மாட்டேன் :

ஏற்றுக்கொள்ள மாட்டேன் :

2018 மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறையின் படி சீனாவின் பிரதமர் இரண்டு ஐந்தாண்டுகள் தான் பதவி வகிக்க வேண்டும் என்பதை மாற்றியிருக்காரக்ள். அதாவது இப்போதிருக்கிற பிரதமர் எக்ஸி ஜின்பிங் தான் கடைசி வரை அவரே சீனாவின் பிரதமராக வேண்டும் என்பதற்கான திட்டம் அது!

இதை நிறைவேற்றிய சில நாட்களில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். சமூகவலைதளங்களில் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து விமர்சனங்களை முன் வைத்தார்கள். இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்த அரசாங்க நான் இதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்ற வார்த்தையை தடை செய்திருக்கிறார்கள்.

அதாவது சமூகவலைதளங்களில் “I disagree” என்ற வார்த்தையை சீன மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ பயன்படுத்த முடியாது. இந்த வார்த்தைக்கு முன்னதாக நிறைய வார்த்தைகள் பயன்படுத்த தடை செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

கரடி பொம்மை :

கரடி பொம்மை :

டிஸ்னியில் உருவாக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் வின்னி த ஃபூஹ். தேன் தேடி அலைந்திரும் கரடி செய்கிற சேட்டைகளை கார்டூனாக வடிவமைத்திருந்தார்கள். கரடி பொம்மையுடன் பிரதமரை ஒப்பிட்டு மக்கள் புகைப்படங்கள் பகிர அந்த கார்டூன் கேரக்டரையும் சீனாவில் தடை செய்திருக்கிறது சீன அரசாங்கம்.

ஏற்கனவே பல வார்த்தைகள் பயன்படுத்த சீனாவில் தடை இருப்பதினால் அவற்றுக்கு பதிலாக மாற்று ஏற்படாக பிற வார்த்தைகள் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பிரதமரின் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது. அதற்காக பூஹ் என்ற இந்த கார்டூன் கரடியின் பெயரை பிரதமர் பெயருக்கு மாற்றாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கும் அரசாங்கம் தடை விதித்துவிட்டது.

Image Courtesy

லைவ் :

லைவ் :

ஃபேஸ்புக்கில் லைவ் ஆப்சன் வந்ததிலிருந்து எல்லாரும் லைவ் வீடியோ கொடுப்பது மிகவும் சாதரண விஷயமாகிவிட்டது. பிற விஷயங்களை தடை செய்வது போல லைவ் அவ்வளவு எளிதாக தடை செய்ய முடியவில்லை என்பதால் சீனாவில் லைவ் தடை!

அரசாங்கத்தால் இதனை சென்சார் செய்ய முடியாது என்பதால் மக்கள் மத்தியில் லைவ் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதை உணர்ந்த சீன அரசாங்கம் லைவ் வீடியோக்களுக்கும் தடை கொண்டு வந்துவிட்டது.

Image Courtesy

ஒற்றை எழுத்து :

ஒற்றை எழுத்து :

ஆங்கில எழுத்துக்களின் பட்டியலில் பதினான்காவது எழுத்தான N சீனாவில் பயன்படுத்த தடை!

ஏனென்றால் இந்த எழுத்து பிரதமரின் பெயரில் இரண்டு முறை இடம்பெற்றிருக்கிறது. அதோடு இங்கே கணக்கில் விடை தெரியா இடத்தில் x என்ற எழுத்து பயன்படுத்துவதைப் போல சீனாவில் N பயன்படுத்துவார்கள்.அது அந்த எழுத்துக்கான மதிப்பு தெரியாது.. என்று பொருள் படும் அல்லவா? உடனே மக்கள் அதனை பிரதமரோடு ஒப்பிட்டு பேச ஆரம்பிக்க ஒரேயடியாக அந்த எழுத்துக்கும் தடை விதித்து விட்டார்கள்.

Image Courtesy

மதம் :

மதம் :

சீனாவை பொறுத்தவரையில் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் நாத்திகர்கள் தான். மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ அரசாங்கம் சொல்வதைத் தான் அவர்கள் பின்பற்றியாக வேண்டும். அவர்களாக எந்த மதமும் பின்பற்றக்கூடாது அதை விட அவர்கள் எந்த மதம் சார்ந்த பண்டிகைகள், கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.

மதம் சார்ந்த எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்தின் பங்களிப்பு இருக்கும். அதாவது வணங்கும் இடம், குறிப்பிட்ட மதத்தினர் பின்பற்றும் பழக்கங்கள் அவர்களின் நம்பிக்கைகள் எல்லாவற்றிலும் அரசாங்கம் தலையிட்டு அவர்களின் ஆணைப்படி தான் நடக்க வேண்டும்.

ஒரு முறை சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை தடை செய்யப்பட்டது. இஸ்லாமிய பெயர்கள், அவர்களின் உடை அணியும் ஸ்டைல், அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகள் ஆகியவற்றையெல்லாம் தடை செய்திருந்தது.

இஸ்லாமிய மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்பது அவர்களது வழக்கமாக இருந்ததினால் அதனை மாற்றும் பொருட்டு வெள்ளிக்கிழமைகளில் தான் குழந்தைகளுக்கு விளையாட்டு சார்ந்த போட்டிகள் பள்ளிகளில் நடத்துவார்களாம். சீனாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.

Image Courtesy