சீனாவின் சக்திக்கு முன் சுஷ்மா அடிபணிந்து விட்டார்- டோக்லாம் விவகாரத்தில் ராகுல் விமர்சனம்

0
0

டோக்லாம் விவகாரத்தில் வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா அடிபணிந்து விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சிக்கிம் மாநிலத் தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன் றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவம் இடையே 50 நாட்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் பதில் அளிக்கும்போது, “முதிர்ச்சியான ராஜதந்திரத்தின் மூலம் டோக்லாம் பிரச்சினையில் எவ்வித இழப்பு மின்றி தீர்வு காணப்பட்டுள்ளது. டோக்லாமில் என்ன நிலை காணப் பட்டதோ, அதே நிலை நீடிக்கிறது. அங்கு எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத் தில், “சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ் அடிபணிந்து விட்டார். இது நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிகுந்த வீரர் களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“டோக்லாமில் சீனா தனது செயல்பாடுகளை மீண்டும் சத்த மின்றி தொடங்கிவிட்டது. இதற்கு இந்தியாவோ, பூடானோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறிய தாக வெளியான செய்தியையும் ராகுல் தனது ட்வீட் உடன் இணைத்துள்ளார்.

“பரஸ்பர சவுகரியம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை உறுதி செய்யவே பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களின் இந்த சந்திப்பில் 3 நோக்கங்களும் நிறைவேறியுள்ளது” என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.