சிவகார்த்திகேயன் – நயன்தாரா படத்தின் ஷூட்டிங்: நேற்று தொடங்கியது!

0
0

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சீம ராஜா’. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 13-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து எம்.ராஜேஷ், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் என இரண்டு பேர் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுக்கும் பூஜை போடப்பட்ட நிலையில், முதலாவதாக பூஜை போடப்பட்ட எம்.ராஜேஷ் படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது.

கடந்த மே 2-ம் தேதி பூஜை போடப்பட்ட இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது. முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படம், சிவகார்த்திகேயனுக்கு 13-வது படமாகும். ‘மன்னன்’ படத்தின் பாணியில் இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ‘மன்னன்’ விஜயசாந்தி கேரக்டர் போல் நயன்தாராவின் கேரக்டர் இருக்கும் என்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது.