சிவகார்த்திகேயனுக்காக தனது பாடல் வெளியீட்டைத் தள்ளி வைத்த அனிருத்

0
0

’சீமராஜா’ டீஸர் வெளியீட்டுக்காக ‘கோலமாவு கோகிலா’ விளம்பரப் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார் அனிருத்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சீமராஜா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 3) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, நேற்றிரவு 8 மணியளவில் ‘சீமராஜா’ டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது.

முன்னதாக, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் நேற்று (ஆகஸ்ட் 3) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

‘சீமராஜா’ டீஸர் வெளியாவதால் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். ஆகையால் ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார். இதற்கு “உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இன்று (ஆகஸ்ட் 4) இரவு 7 மணியளவில் ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்து, நடித்திருக்கும் ‘திட்டம் போடத் தெரியல’ விளம்பரப் பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.