சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 28 பேர் பலி

0
0

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள டை இஸ்சார் மாகாணத்தில் அல் சவுசா கிராமத்தில்  வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 28 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்தி உள்ளனர்” என்று கூறியுள்ளனர்.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பெருமளவு கைப்பற்றப்பட்டுவிட்டன. இந்த நிலையில் ஐஎஸ் வசம் உள்ள மிதமுள்ள இடங்களில் ஐஎஸ்சுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

சிரியா போர்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.  அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 3 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப் போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.