சினேகன், ஜூலின்னு லெஜண்டுக வந்துட்டுப்போன எடம்யா.. இப்படி சப்ப குமாரு, மொக்க மகத்த வச்சிருக்கீங்க | Bigg Boss 2 Tamil viewers miss Snehan, Julie, Gayathri

0
0

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் பார்வையாளர்களுக்கு சினேகன், ஜூலி, காயத்ரி ஆகியோரின் அருமை தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போன்று விறுவிறுப்பாக இல்லை. போட்டியாளர்கள் அனைவரும் போலியாக நடிப்பதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸனே தெரிவித்துவிட்டார்.

நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்குகளை கண்டுபிடித்த அந்த விஞ்ஞானிக்கு மாலை போட்டு தான் பாராட்ட வேண்டும். ப்ப்பா, சான்சே இல்லை, என்ன ஒரு புத்திசாலித்தனம். இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பலரும் சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூலி

சினேகன், ஜூலி, காயத்ரி, ஆர்த்தி ஆகியோரின் அருமை தற்போது தான் புரிகிறது.

நிகழ்ச்சி

ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் குடுமிபிடி சண்டை போடுவது போன்று காட்டுகிறார்கள். நிகழ்ச்சியில் பார்த்தால் வாடா மாப்ள என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டியாளர்கள்

பிக் பாஸ் 2 போட்டியாளர்களின் குணாதிசயமாம்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மகத் இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஒரிஜினில் வீடியோவை காட்டுகிறாராம்.

சிம்பு

சிம்புவின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு மகத் செய்யும் சேட்டைகளால் சிம்பு பெயரும் சேர்ந்து கெடுகிறதாம்.