சிந்து, பிரணாய் தோல்வி – இந்து தமிழ் திசை

0
0

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதியில் 7-ம் நிலை வீராங்கனையான சீனாவின் பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இடது கை வீராங்கனையான பிங்ஜியோவுக்கு எதிராக விளையாடிய 11 ஆட்டங்களில் சிந்து தோல்வியடைவது இது 6-வது முறையாகும்.

ஆடவர் பிரிவில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், 3-ம் நிலை வீரரான சீனாவின் ஷி யூகியை எதிர்கொண்டார். இதில் ஷி யூகி 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 39 நிமிடங்களில் முடிவடைந்தது.