சாப்பிடாமல் கூட கதை கேட்ட ராய் லட்சுமி

0
0

சுவாரசியத்தில் மெய்மறந்து சாப்பிடாமல் கூட கதை கேட்டிருக்கிறார் ராய் லட்சுமி.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய வினோ வெங்கடேஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிண்ட்ரல்லா’. ஃபேன்டஸி, ஹாரர், த்ரில்லர், எமோஷனல் கலந்த படமாக இது உருவாகிறது. எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

“இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்கப் புதிதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையிலும் இருக்கும். படத்தின் தலைப்புதான் இந்தக் கதைக்குள் எல்லாரையும் ஈர்த்தது. தயாரிப்பாளர் கூட தலைப்பைக் கேட்டுத்தான் தயாரிக்க முன்வந்தார்” என்கிறார் வினோ வெங்கடேஷ்.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் நடிக்கிறார் ராய் லட்சுமி. படப்பிடிப்பில் இருந்த அவரை, மதிய உணவு இடைவேளையில் தான் சந்தித்துக் கதை சொல்லியிருக்கின்றனர். கதையின் சுவாரசியத்தில் மெய்மறந்து, சாப்பிடக்கூட இல்லாமல் முழுக் கதையையும் கேட்டிருக்கிறார் ராய் லட்சுமி.

கதை கேட்டு முடித்ததுமே நடிக்கச் சம்மதம் சொன்னவர், தன் கதாபாத்திரத்துக்கான அனைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்டு, ‘சிண்ட்ரல்லா’வாகத் தன்னைத் தயார் செய்து வருகிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.