சர்க்கார் திரைப்பட அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்க தெரியுமா…? | Sarkar movie shooting update!

0
0

சென்னை: சர்க்கார் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறுகிறது.

சர்க்கார் திரைப்படக்குழு ஜனவரி 19ஆம் தேதி படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகின்றனர். தற்போது சென்னை ஷூட்டிங் ஷெட்யூலை முடித்துவிட்டனர்.

இந்த நிலையில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்க அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்திற்கு படக்குழு இன்று விரைகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 6ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

மெர்சல் திரைப்படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு நடன அமைப்பு செய்த ஷோபி இந்த பாடலுக்கு நடன அமைப்பு செய்ய உள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பைய, பிரேம்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சர்க்கார் திரைப்படத்தை ஏஆர்,முருகதாஸ் இயக்குகிறார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தாயாரிக்கிறது. இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.