சர்கார் போஸ்டர் பிரச்சனையாகிய நேரத்தில் பிக் பாஸில் தம்மடிப்பது பற்றி பேசிய கமல் | Kamal talks about smoking in Bigg Boss 2 Tamil house

0
0

சென்னை: சர்கார் போஸ்டர் பிரச்சனை பெரிதாகியுள்ள நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பது பற்றி பேசியுள்ளார் கமல்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் பட போஸ்டரில் தளபதி தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தது பிரச்சனையாகிவிட்டது. அந்த போஸ்டரை இணையதளங்களில் இருந்து நீக்குமாறு தமிழக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து சர்கார் போஸ்டர் நீக்கப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் மேடையில் கமல் தம்மடிப்பது பற்றி பேசியுள்ளார்.

ஒழுக்கம்

பிக் பாஸ் வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று கூறினார் பொன்னம்பலம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்க்கும் நிகழ்ச்சியில் ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு அவர் கூற அதை கமல் வரவேற்றார்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூடுதல் நேரம் கேட்டுவிட்டு வந்து போட்டியாளர்களிடம் பேசினார் கமல். பொன்னம்பலம் அப்பா, அனந்த் தாத்தா. அவர்கள் இருவருமே அக்கறை கொண்டவர்கள் என்றார் கமல்.

அப்பா

அப்பா

தாத்தா செல்லம் கொடுப்பார், அப்பா தான் கண்டிப்பார் என்று கமல் தெரிவித்தார். கமல் பொன்னம்பலம் கூறியது சரி என்று நியாயப்படுத்தி பேசியதை கேட்டு ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் அதிர்ந்து போய்விட்டனர்.

ஆண்கள்

ஆண்கள்

ஆணுக்கு சமமாக இருப்பதில் ஆணை விட சிறப்பாக இருப்பதில் தான் உள்ளது. ஆண்கள் செய்யும் தவறுகளை எல்லாம் செய்வதால் அவர்களை விட சிறந்தவர்களாகிவிட முடியாது. உதாரணத்திற்கு சிகரெட் பிடிப்பது. அது உங்களை அவர்களுக்கு சமமாக ஆக்காது. ஏன் சொல்கிறேன் என்றால் அது ஒழுக்கக் கேடு என்பதை விட ஆரோக்கியத்திற்கு கேடு என்றார் கமல்.

வக்கீல்

வக்கீல்

நானும் பொன்னம்பலம் மாதிரி அப்பாவாக இருந்து பேசுகிறேனே தவிர ஆணாக இருந்து பேசவில்லை. நான் வக்கீலாக இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்காக வாதாடி உங்களை சிறைக்கு செல்லவிடாமல் தடுத்திருப்பேன் என்று பொன்னம்பலத்திடம் கூறினார் கமல். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகளை கமல் தட்டிக் கேட்டு அதட்டியது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. நன்றி கமல் சார்.