‘சர்கார்’ சர்ச்சை.. விஜய், முருகதாஸூக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் ! | TN Govt Issues Notice Over ‘Sarkar’ Poster To Actor Vijay, Director Murugadoss

0
0

சென்னை : சர்கார் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படத்தை வெளியிட்டதற்கு எதிராக, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் 21ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. இதில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சில சுகாதார அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், புகை பிடித்தபடி விஜய் இருக்கும் சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீஸில் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றாவிட்டால், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளப் பட்டுள்ளது.

சர்கார்