சமீபத்தில் இப்படிப்பட்ட பந்துவீச்சை ஒருநாள் போட்டிகளில் பார்க்கவில்லை; டெஸ்ட்டிலும் குல்தீப்: கோலி சூசகம்

0
0

முதல் ஒரு நாள் போட்டியில் சவாலின்றி இங்கிலாந்து குல்தீப்பிடம் சரணடைய பிற்பாடு ரோஹித் சர்மா தனது தொடர்ச்சியான 2வது சதத்தை எடுக்க இங்கிலாந்து அணியின் இலக்கை இந்திய அணி நடந்து சென்று வென்றது.

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:

எவ்வளவு துல்லியமாக வெல்ல முடியுமோ அவ்வளவு துல்லியமான வெற்றி. இது பேட்டிங் பிட்ச் என்பது தெரியும், ஆனால் ரிஸ்ட் ஸ்பின் நடு ஓவர்களில் சிக்கலைத் தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம்.

குல்தீப் பந்து வீச்சு தனிச்சிறப்பானது. சமீபத்தில் இப்படிப்பட்ட ஒருநாள் பந்து வீச்சை நான் பார்க்கவில்லை. அவர் தன்னம்பிக்கையுடன் வீசுவதை விரும்புகிறோம், ஏனெனில் குல்தீப் மேட்ச் வின்னர்.

இந்தப் பிட்ச்களில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை எனில் கடினம்.

(டெஸ்ட் அணியிலும் குல்தீப் தேர்வு செய்யப்படுவாரா?) ஆம் டெஸ்ட் போட்டி அணியில் சில ஆச்சரியங்கள் இருக்க வாய்ப்புண்டு. டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன.

இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் தடுமாறுவதைப் பார்க்கும் போது குல்தீப்பை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் உள்ளது.

வானிலை அருமையாக உள்ளது, சொந்த நாட்டிலிருந்து வெளியே இருக்கும் உணர்வு இல்லை, ஆனால் கடினமான கிரிக்கெட் எங்களுக்கு முன்னால் சவாலாக உள்ளது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.