சன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. ! | Sunny Leone released her web series trailer!

0
0

மும்பை: நடிகை சன்னி லியோன் நடிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான தரஞ்சித் கவூர் ட்ரெயிலைரை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் பிறந்து போர்னோ பட நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து, தற்போது பாலிவுட் சினிமாவை கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். வேற்றுலக வாசிகளுக்குக்கூட சன்னிலியோனைத் தெரியும் என்று சொல்லுமளவுக்கு அவரின் புகழ் உச்சம் தொட்டுள்ளது.

மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், பல்வேறு சமூக சேவை சார்ந்த விஷயங்களிலும் நாட்டம் காட்டும் நடிகை. அவரின் திரைவாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் திரைமறைவு வாழ்க்கை ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது?

கனடாவில் ஒரு நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தில் பிறந்த சன்னி லியோனின் இயற்பெயர்தான் கரஞ்சித் கவுர். இவரது வாழ்க்கை தற்போது படமாகியுள்ளது. இதில் சன்னி லியோனாக அவரே நடித்துள்ளார். சீ5 நிறுவனம் தயாரிக்கும் “கரஞ்சித் கவுர்” வெப் சீரீஸில் சன்னி லியோனின் பால்ய வயது கதாபாத்திரமாக “டோபரா” என்ற இந்தி படத்தில் நடித்த 14 வயது ரைசா சௌஜானி நடிக்கிறார்.

முதல் பாகம் ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெயிலரை வெளியிட்டுள்ள சன்னி லியோன், “நீங்கள் சன்னி லியோனை பார்த்துள்ளீர்கள்… இது கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம் என ட்வீட் செய்துள்ளார்.

“எந்த ஒரு இந்தியப் பெண்ணும் இப்படி இருக்க மாட்டள்” என்று தொகுப்பாளர் சன்னிலியோனை அறிமுகம் செய்கிறார். அதன்பிறகு சன்னிலியோன் பள்ளி நாட்களிலிருந்து போர்னோ படங்களுக்கு நடிக்க ஆரம்பித்து பிறகு மெல்ல… மெல்ல… பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்த காட்சிகள் காட்டப்படுகின்றன.

சன்னி லியோனின் பள்ளிப்பருவ நாட்கள் மிகவும் வலி மிகுந்ததாகவும், அதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு விருப்பம் அதிகம் என்றும், அவருடன் அடிக்கடி ஸ்கைப்பில் உரையாடி ஆலோசனை பெற்றதாகவும் நடிகை ரைசா தெரிவித்துள்ளார்.