சனிபகவானுக்கு உகந்த நாளான இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது?… | horoscope for 04 August 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

0
0

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

வியாபாரங்களில் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் உண்டாகும் நாள். உடல் சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்கின்ற தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 – மே 20

உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் தங்களுடைய மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். வாகனத்தை பழுது பார்ப்பதற்கான சிறு விரயச் செலவுகள் உண்டாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட உண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உதவியினால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். செய்கின்ற தொழிலில் சில சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் – 22 ஜூலை

உங்களுடைய புதிய புதிய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பணம் சேமிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். அரசு அதிகாரிகளின் உதவியினால் உங்களுடைய சில செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கிறது.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை – 21 ஆகஸ்ட்

தொழிலில் உங்களுடைய பழைய பங்குதாரரை மாற்றி புதிய பங்குதாரரை சேர்ப்பீர்கள். இதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். உங்களுடைய பழைய நினைவுகளால் வீண் கவலைகள் உண்டாகும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

சில நேரங்களில் உங்களுக்கு மன அமைதியற்ற நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களுடைய பிரச்னையில் தலையிடுவதை தவிர்த்துவிடுங்கள். அதன்மூலம் தேவையில்லாத அவப்பெயர் உண்டாகலாம். பொருள் சேர்க்கை கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த காரியமாக இருந்தாலும் அதை சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

உங்களுடைய சொத்துப் பிரச்னைகளுக்கு உங்களுக்கு சாதகமான சுமூகமான தீர்வுகள் உண்டாகும். வியாபாரங்களில் உங்களுக்கு போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். எதையும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

தொழில் முனைவோருக்கு இடையே போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்ப உறுப்பினர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராமல் உண்டாகும் செலவுகளினால் உங்களுடைய சேமிப்புகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் புதிய நபர்களுடைய நட்பு உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம்அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

குடும்பத்தில் என்ன தேவை என்பதை உணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளியூரக்கு பயணங்களை மேற்கொள்வதால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுடைய சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் – 20 ஜனவரி

உங்களுடைய பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த பணியை முழு மனதோடு செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உறவினர்களின் மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி – 20 மார்ச்

வெளியூரிலிருந்து சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்கள் செய்ய முற்படுவீர்கள். நம்பிக்கையுடன் புதிய முயுற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியில் இருந்து வந்த சின்ன சின்ன இடையூறுகள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தின் சூழ்நிலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருப்பது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.