சட்டத்தை மீறி மது பாட்டில்கள் எடுத்துச்சென்ற உ.பி. அதிகாரி பிஹார் போலீஸாரால் கைது: இதுவரை 1.5 லட்சம் பேர் கைது

0
0

பிஹாரில் தடைச்சட்டத்தை மீறி மதுவைப் பயன்படுத்தியதாக உத்தரப் பிரதேச சேல்ஸ் டாக்ஸ் துணை ஆணையர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட்டை சொந்த மாநிலமாகக் கொண்டவர்  அபாய் பாண்டே. இவர் சேல்ஸ் டாக்ஸ் துணை ஆணையராக ரூர்கியில் பணியாற்றி வருகிறார். அவரது வாகனத்திலிருந்து நேற்று இரண்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாண்டே, உத்தரப் பிரதேசம் அருகே கூட்னி செக்போஸ்ட்டில் கைது செய்யப்பட்டதாக சிவான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நவீன் சந்திரா ஜா தெரிவித்தார்.

பாண்டே, உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவில் பணியாற்றி வருகிறார். சிவான் நகரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்ததாக சந்திரா ஜா தெரிவித்தார்.

பிஹாரில் ஏப்ரல் 5 2016-ம் ஆண்டிலிருந்து மது அருந்துவது முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் இத்தடைச் சட்டத்தை மீறி மது அருந்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் மற்றும் கடந்த ஏப்ரலில் இரண்டு பாஜக எம்எல்ஏக்களும் இத்தடைச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டனர்.