சச்சின் மகனுக்கு பயிற்சியளிக்க மாட்டார் ராகுல் டிராவிட் ஏன் தெரியுமா

0
43

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு அணியின் கோச் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். இந்தாண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றது.

இதற்கு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் பிருத்வி ஷாவுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தன. அதன்பிறகும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

இதறகான அணியில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தன்னுடைய நண்பரான சச்சினின் மகனுக்கு டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார். அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணிக்கு டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார். அதனால் முன்னாள் வீரர்கள் டபிள்யூ வி ராமன் மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சி அளிப்பார்கள்.