கோலாகலமாய் நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்!

0
0

உலகப் பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் நேற்று (ஜூன் 26) புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது  சிறந்த சிவ பக்தையான காரைக்கால் அம்மையாரின் சிவ பக்தியைச் சோதிக்கும் பொருட்டு சிவபெருமான் காரைக்கால் அம்மையார் இல்லத்துக்கு பிச்சாண்டவர் கோலத்தில் சென்று பசிக்கு உணவு கேட்கிறார்  அவரை அன்புடன் அழைத்து அறுசுவை விருந்தளித்த காரைக்கால் அம்மையார் தனது கணவர் பரமதத்தர் அனுப்பி வைத்த இரு மாங்கனிகளில் ஒன்றையும் பிச்சாண்டவருக்கு உணவாகப் படைத்தார்  அதனைப் பிச்சாண்டவர் உண்டு அம்மையாரை வாழ்த்திச் சென்றுவிட்டார்  அதன்பின் மதிய உணவு அருந்த வந்த கணவர் பரமதத்தருக்கு மற்றொரு மாங்கனியை உணவுடன் சேர்த்து வைத்தார் அந்த மாங்கனி மிகவும் ருசியாக இருப்பதாகவும் நான் அனுப்பிய இன்னொரு மாங்கனியையும் எடுத்து வா என்று பரமதத்தர் கேட்க செய்வதறியாது தவித்த அம்மையார் சிவபெருமானிடம் போய் வேண்டினார்  அப்போது மற்றொரு மாங்கனி சிவபெருமான் அருளால் கிடைக்க அதனைக் கணவருக்கு உணவு படைத்தார்  இது முன்னே அருந்திய மாங்கனியைவிடச் சுவையாக இருக்கிறதே இது நான் அனுப்பியது தானா என்று பரமதத்தர் கேட்க அம்மையார் நடந்த உண்மையை உரைத்தார்  இதனை நம்பாத பரமதத்தர் அப்படியெனில் இன்னொரு மாங்கனியை இறைவனிடம் வேண்டி வரவழைத்துக் காட்டு என்கிறார்  கணவர் முன் மீண்டும் அம்மையார் சிவபெருமானை வேண்ட மேலிருந்து மீண்டும் ஒரு மாங்கனி அம்மையார் கைகளில் விழுந்தது  இதனைக் கண்ட பரமதத்தர் நீ மனிதப் பிறவி அல்ல தெய்வப் பிறவி  இனி உன்னுடன் வாழ்ந்தால் தெய்வக் குற்றமாகும் என்று கூறி அம்மையாரை விட்டுப்பிரிந்து பாண்டியநாடு சென்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்  சிலகாலம் கழித்து இதனையறிந்த அம்மையார் பரமதத்தரை சென்று பார்க்கும்போது பரமதத்தர் தன் மனைவி குழந்தையுடன் காலில் விழுந்து வணங்கினார்  இதனை ஏற்றுக்கொள்ளாத அம்மையார் கயிலாய மலைக்குச் செல்ல அங்கு சிவபெருமானே  39அம்மையே வருக39  என்று அழைத்து அவருக்கு வேண்டிய வரத்தை அருளினார்  இதுதான் காரைக்கால் அம்மையாரின் வரலாறு  இதனை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடைபெறுகிற மாங்கனித் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 26) முக்கிய நிகழ்ச்சியாக காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது  இதனைத் தொடர்ந்து இரவில் காரைக்கால் அம்மையாரும் பரமதத்தரும் முத்துச்சிவிகையில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது