கோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு ‘ஹிட்டு பார்சல்’ | Kolamaavu Kokila trailer looks promising

0
0

சென்னை: கோலமாவு கோகிலா ட்ரெய்லரை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா விற்பனை செய்யும் கோலமாவு போதைப் பொருள் ஆகும். கஞ்சா காஞ்சனா என்று பெயர் வைப்பதற்கு பதில் கோலமாவு கோகிலா என்று வைத்துள்ளார் நெல்சன்.

கோலமாவு கோகிலா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா உம்மென்ற முகத்துடன் இருக்கிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சரண்யா வரும் காட்சிகளை பார்த்தால் தானாக சிரிப்பு வருகிறது. அதிலும் போதைப் பொருளுக்காக சரண்யா கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பேச வைத்தார்

ட்ரெய்லரில் நயன்தாரா பெரிதாக பேசாமல் அவரை பற்றி நம்மை பேச வைத்துவிட்டார். ட்ரெய்லரை பார்த்தால் படம் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது தெரிகிறது. சரண்யா வழக்கம் போன்று தனது நடிப்பால் தனித்து நிற்கிறார்.

10 லட்சம்

10 லட்சம்

கோலமாவு கோகிலா ட்ரெய்லர் யூடியூபில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது. மேலும் ட்ரெய்லரை இதுவரை 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மாஸ்

கோலமாவு கோகிலா ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் செம, மாஸ், அருமை என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.