கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.25-க்கு விற்பனை

0
0

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைவால் அதன் விலை கிலோ ரூ.25 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலப் பகுதிகளில் இருந்து தக்காளி கொண்டு வரப்படு கிறது.

கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்திருப்பதால் அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.15 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி, நேற்று ரூ.25-க்கு விற்கப் பட்டது.

மற்ற காய்கறிகளான வெங்காயம் ரூ.18, சாம்பார் வெங்காயம் ரூ.55, கத்தரிக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.21, அவரைக்காய் ரூ.17, வெண்டைக் காய் ரூ.20, முள்ளங்கி ரூ.15, பாகற்காய் ரூ.45, பீன்ஸ் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.8, கேரட் ரூ.22 என விற்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:

‘‘கோயம்பேடுக்கு தக்காளி அனுப்பப்படும் பகுதிகளில் தற்போது அறுவடை பருவம் நிறைவடையும் நிலையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அங்கு மழையும் பெய்துள்ளது. அதனால் தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது” என்றார்.