கொலை திட்டத்துடன் திரிந்ததாக துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது: புதிதாக தயாரிக்கப்பட்ட 20 அரிவாள்கள் பறிமுதல்

0
0

கொலை திட்டத்துடன் திரிந்த 4 ரவுடிகளை தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட 20 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தண்டையார்பேட்டை மேம்பாலம் அருகே வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவளி பிரியாவின் சிறப்பு தனிப்படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர் கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பது தெரியவந்தது.

அவரது பைக்கில் இருந்து அரிவாள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தனது கூட்டாளிகளுடன் கொலை திட்டத்துடன் சுற்றித் திரிந்த தாக போலீஸார் தெரிவித்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பதுங்கி இருந்த லட்சுமணனின் கூட் டாளிகள் மேல்மலையனூர் பிரபு என்ற பிரபாகரன் (21), அதே பகுதி யைச் சேர்ந்த கோவிந்தராஜ் (27), ராஜ்குமார் (18) ஆகியோரை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதி தாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 19 அரிவாள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எதிர் தரப்பினரைத் தீர்த்துக் கட்டும் நோக்கத்துடன் இருந்துள்ளனர். அவர்களைக் கைது செய்து சதித் திட்டத்தை முறியடித்துள்ளோம்” என்றனர்.