‘கை ராட்டை’யைச் சுற்றியதால் சர்ச்சை… பிரபல நடிகருக்கு நோட்டீஸ் | kkvib issues legal notices to mohanlal over ad

0
0

திருவனந்தபுரம்: தனியார் துணி நிறுவன விளம்பரத்தில் நூல் நூற்கும் கை ராட்டையைச் சுற்றும் காட்சியில் நடித்ததால், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான ஓணம் இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, தனியார் நிறுவனங்களுக்குடன் போட்டிப் போட்டு சிறப்பு விற்பனை நடத்தி வருகிறது அம்மாநில அரசு காதி வாரியம்.

இந்நிலையில், தனியார் துணி நிறுவன விளம்பரம் ஒன்றில் கை ராட்டை சுற்றுவது போன்ற காட்சியில் நடித்திருந்தார் மலையாள முன்னணி நடிகரான மோகன்லால். இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள காதி வாரியம், மோகன்லாலுக்கும், அவர் நடித்திருந்த நிறுவன உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள காதி வாரியத் தலைவர் ஷோபனா ராஜ் கூறுகையில், “கை ராட்டை மூலம் கதர் துணிகள் மட்டுமே தயாரிக்க முடியும். அதிலும் கை ராட்டை என்பது தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் மோகன்லால் ராட்டை சுற்றுவது போன்று நடித்திருக்கும் துணி நிறுவனம் காதி மற்றும் கை ராட்டைக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று கூறி அந்த விளம்பரத்தை திரும்பபெறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

துணி விளம்பரத்தில் நடித்ததால் மோகன்லாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.