கை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது? அதை எப்படி போக்குவது? | How To Get Rid Of Dark Spots on Knees and Elbows

0
0

ஆள் பாதி அழகு மீதி!

டீசண்டாக டிப் டாப்பாக உடை உடுத்தி உலாவும் நாம், நம் உடலையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கையில் கருமை இருந்தால் என்ன? யாருக்கு என்ன நஷ்டம் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். ஆனால், உங்களை இந்த உலகம், சுற்றியுள்ள மனிதர்கள் எப்பொழுதும், எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்; நீங்கள் அணியும் ஆடை, உங்கள் உடல் தோற்றம் இந்த விஷயங்களை முன்னிறுத்தி தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையே நிர்ணயிக்கின்றனர்.

நம்முடைய உடல் தோற்றம் அழகானதாக இருந்தால், அந்த உணர்வே நமக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்; எனவே கை மற்றும் கால்களின் முட்டிகளில் ஏற்பட்டு உடல் அழகை கெடுக்கும் கருமையை எப்படி போக்குவது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்.! படித்ததை செய்து அழகான உடல் தோற்றம் கொண்டு மதிப்புடன் வாழ்வோமாக!

ஏன் ஏற்படுகிறது?

ஏன் ஏற்படுகிறது?

மனித உடல் தன்னை தானே காக்கும் சக்தியை இயற்கையிலேயே பெற்று உருவாகுமாறு அமைக்கப்பட்டுள்ளது. உடல் திசுக்களை காக்க வேண்டிய பட்சத்தில் ஏதேனும் வளர்ச்சி அல்லது மாற்றங்கள் ஏற்படலாம்; கை மற்றும் கால் முட்டிகளை உராய்வில் இருந்து காப்பதற்காக அதனை சூழ்ந்துள்ள தோல் கருமையையும், சொரசொரத் தன்மையையும் அடையலாம், சூரிய ஒளியின் கதிர்கள் உடலில் கருமையை ஏற்படுத்தலாம், உடலில் நீக்கப்படாமல் சேர்ந்த அழுக்குகள் இந்த நிலையை ஏற்படுத்தலாம், மரபு ரீதியான காரணங்கள் அல்லது உட்கொள்ளும் மாத்திரை மருந்துகள் உடலின் தன்மையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இப்பொழுது இதனை உடனடியாக போக்க உதவும் சில குறிப்புகளை பற்றி படித்தறியலாம்.

தேன்

தேன்

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர்; எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும்.

தேவையானவை:

தேன் – 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு – பாதி எலுமிச்சை, சர்க்கரை – 2 தேக்கரண்டி

செய்முறை:

இந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து, நன்றாக கலந்து வாரத்திற்கு இருமுறை முட்டிகளில் தடவி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமை மற்றும் தழும்புகள் மாயமாய் மறைந்துவிடும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் உடலின் அழகை, மினுமினுப்பு தன்மையை அதிகரிக்க வல்லது. மேலும் பால் மற்றும் தேன் உடலிற்கு ஈரப்பதம் மற்றும் பொலிவை தரவல்லது.

தேவையானவை:

தேன் – 1 தேக்கரண்டி, பால் – 2 தேக்கரண்டி, மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:

இந்த மூன்றையும் ஒன்றாய் சேர்த்து, நன்றாக கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முட்டிகளில் தடவி வந்தால் போதும், முட்டிகளில் ஏற்பட்டிருக்கும் கருமையும், தழும்புகளும் உடனடியாக மறைந்து விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை உடலை சுத்தம் செய்து, தேகத்தை மெருகூட்டும் காரணியாக விளங்குகிறது.

தேவையானவை:

எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சை சாறினை கருமை உள்ள இடங்களில், பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் தடவி வந்தால், அது சருமத்தில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்கி, சருமம் பொலிவு பெற உதவும். இதை தினந்தோறும் அரை அல்லது ஒரு மணிநேரம் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் போதும்.

தயிர்

தயிர்

தயிர் மற்றும் வினிகர் இந்த இரண்டையும் ஒன்றாய் கலந்து பயன்படுத்தினால், அது சருமத்தில் ஒளிந்துள்ள அழுக்குகளையும், சருமத்தின் இறந்த செல்களையும் நீக்க உதவும்.

தேவையானவை:

தயிர்- 1 தேக்கரண்டி, வினிகர் – 1 தேக்கரண்டி

செய்முறை:

இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து, நன்றாக கலந்து தினந்தோறும் கருமை நிறைந்த முட்டிகளில் தடவி வருதல், சருமத்தின் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, சருமம் பளிச்சிட உதவும். இதை 15-30 நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவுதல் வேண்டும்.

உருளை

உருளை

உருளை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகளை போக்குவதை தன இயல்பாகக் கொண்டது.

தேவையானவை:

அறுத்த உருளைக்கிழங்கு – 1

செய்முறை:

அறுத்த உருளை துண்டுகளை அல்லது கூழாக்கிய உருளையை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகள் நிறைந்த இடங்களில், முட்டைகளின் கருமை நிறைந்த பாகங்களில் தடவி 15-30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது சருமத்தின் கருமையை போக்கி, உடலில் பொலிவை ஏற்படுத்த உதவும்.