கேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி! | Kerela flood: Actors Surya and Karthi gives Rs.25 lakhs

0
0

சென்னை: வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர்கள் சூர்யா – கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், கேரள மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் சுமார் 8 அடி உயரத்துக்கு வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்துக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், துணை ராணுவமும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தில், கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். கேரளாவின் நிலையை கண்டு மனம் வருந்துவதாகவும், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.