கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் ஷாப்பிங் லிஸ்ட் தயார் செய்வது எப்படி?

0
25

நம் வீட்டுக்கு தேவையான பொருட்களை சூப்பர் மார்க்கெட் சென்று வாங்குவதற்கு முன்னர் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று மனதில் யோசித்து அதை மூளையில் பதிவு செய்து கொண்டே போவோம். ஆனாலும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும்தான் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய பொருட்களை வாங்க மறந்துவிட்டோம் என்பது தெரியவரும். அது நம்முடைய குற்றமும் அல்ல.

எல்லா பொருட்களையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்ல. ஆனால் அதே நேரத்தில் டெக்னாலஜி வளர்ந்து விட்ட இன்றைய உலகில் எதையும் ஞாபகம் வைத்து கொள்ளாமல், ஒன்றை கூட மிஸ் செய்துவிடாமல் வீட்டுக்கு வாங்கி வருவது என்பது சாத்தியமே. மனதில் பதிய வைக்காமல் , பேப்பரில் எழுதாமல் நமக்கு தேவையான பொருட்களை வாய்ஸ் மூலம் பதிவு செய்து அதனை மீண்டும் கேட்டு ஒரு பொருளையும் தவற விடாமல் வாங்கிவிடலாம்.

நாம் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க அதற்காக ஒரு லிஸ்ட்டை தயார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூகுளில் சென்று ஒகே கூகுள் என்று கூறினால் போதும். தானாகவே ஒரு புதிய ஷாப்பிங் லிஸ்ட் பக்கம் தோன்ற ஆரம்பித்துவிடும்அதன் பின்னர் உங்களுக்கு தேவையான பொருட்களை வாய்ஸ் மூலம் இந்த ஷாப்பிங் லிஸ்ட்டில் பதிவு செய்து அதன் பின்னர் அதனை கூகுள் ஹோம் செயலி மூலம் சரிபார்த்தும் கொள்ளலாம்.

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் ஷாப்பிங் லிஸ்ட் தயார் செய்வது எப்படி?

1. உங்களுடைய ஷாப்பிங் லிஸ்ட் ஓப்பன் ஆக வேண்டும் என்றால் அதற்கு ‘ஓகே கூகுள் என்று கூறிவிட்டு என்னுடைய ஷாப்பிங் லிஸ்ட் வேண்டும் என்று கூறினால் போதும். இதற்கு நீங்கள் மெனு பட்டன் சென்று அதன் பின்னர் ஷாப்பிங் லிஸ்ட் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். இந்த முறை செயல்படவில்லை என்றால் மெயின் மெனு சென்று அதில் உள்ள செட்டிங்-சர்வீசஸ்-ஷாப்பிங் லிஸ்ட் சென்றால் போதுமானது

2. அதன் பின்னர் நீங்கள் என்னென்ன வேண்டும் என்று பதிவு செய்தீர்களோ அந்த லிஸ்ட்டை செக் பாக்ஸில் பார்க்கலாம்.

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் ஷாப்பிங் லிஸ்ட் தயார் செய்வது எப்படி?

கூகுள் ஹோம் செயலி மூலம் லிஸ்ட் கிரியேட் செய்வது எப்படி?
கூகுள் அக்கவுண்டில் நீங்கள் எத்தனை ஷாப்பிங் லிஸ்ட் வேண்டுமானாலும் கிரியேட் செய்யலாம். ஆனால் இந்த கூகுள் ஹோம் செயலியில் அவ்வாறு செய்ய முடியாது. புதிய ஷாப்பிங் லிஸ்ட் கிரியேட் செய்ய ஏற்கனவே பதிவு செய்துள்ள பிரைமரி லிஸ்ட்டில் உள்ள வாய்ஸ் கமாண்ட்டில் கூடுதலாக சேர்த்தால் போதும்

1. முதலில் மெனு டேப்பை கிளிக் செய்ய வேண்டும்

2. கூகுள் அசிஸ்டெண்ட் சென்று அதில் உள்ள ஷாப்பிங் லிஸ்ட்டை டேப் செய்யவும். இதன் மூலம் கூகுள் குரோமில் ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்

3. அந்த விண்டோவில் புதிய லிஸ்ட் என்பதை டேப் செய்து ஓப்பன் செய்யவும்

4. இந்த லிஸ்ட்டுக்கு ஒரு பெயர் வைத்து பின்னர் அந்த லிஸ்ட்டை ஒரு பிரைமரி லி’ஸ்ட்டாக வைத்து கொள்ளவும்

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் ஷாப்பிங் லிஸ்ட் தயார் செய்வது எப்படி?

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் லிஸ்ட்டை ஷேர் செய்வது எப்படி?
இந்த லிஸ்ட்டை நீங்கள் உங்கள் காண்டாக்ட்டில் உள்ளவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கூகுள் ஹோம் செயலியை பயன்படுத்தலாம்

1. முதலில் மெனு பட்டனை க்ளிக் செய்யவும்

2. அதன் பின்னர் கூகுள் அசிஸ்டெண்ட் சென்று அதில் உள்ள ஷாப்பிங் லிஸ்ட்டை செலக்ட் செய்யவும். அதன் மூலம் உங்களுக்கு குரோமில் ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்

3. எந்த ஷாப்பிங் லிஸ்ட்டை ஷேர் செய்ய வேண்டுமோ அந்த லிஸ்ட்டை செலக்ட் செய்யவும்

4. பின்னர் ஷேரிங் ஐகானை டேப் செய்யவும்

5. அதன் பின்னர் யாருக்கு ஷேர் செய்ய வேண்டுமோ அவர்களுடைய எண்ணை காண்டாக்டில் இருந்து செலக்ட் செய்யவும் அல்லது மேனுவலாக இமெயில் முகவரியை டைப் செய்யவும்.

6. அதன் பின்னர் சேவ் செய்யவும்

இதன் மூலம் உங்கள் ஷாப்பிங் லிஸ்ட்டை தேவையானவர்களுக்கு இமெயில் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்தையும் முடித்த பின்னர் வேறு ஏதாவது அதில் சேர்க்கவோ அல்லது தை டெலிட் செய்வதோ அது உங்கள் விருப்பம்.