குழந்தை ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிசெய்வது தாய்ப்பாலா? | Breastfeeding Advantages and Benefits

0
0

தாய்ப்பாலின் முக்கியத்துவம்!

குழந்தைக்கு தாய்ப்பாலை, அது பிறந்ததும் அளிக்கின்றனர்; குழந்தைக்கு அளிக்கப்படும் முதல் மற்றும் முக்கிய உணவாக தாய்ப்பால் விளங்குகிறது. குழந்தை தாயின் கருவறை என்னும் தூய்மையான கலப்படமில்லாத இடத்தில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு, தரவேண்டிய உணவும் கலப்படமில்லாததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் என்னவோ பெண்களில் தாய்ப்பாலை ஏற்படுத்தினான், இறைவன்.

தங்களின் ஆரம்ப கால வளர்ச்சியில் தூய்மையான, சத்தான உணவை உண்டு குழந்தைகள் அவளர்கையில், அவர்களின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே கூறலாம்.

குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தைக்கு சரியான காலகட்டம் வரை தாய்ப்பால் அளிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்று இப்பொழுது காணலாம்:

  1. இது குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரியான விகிதத்தில் அளிக்கிறது.
  2. குழந்தையின் உடலில் அலர்ஜி, நோய் பாதிப்புகள், குண்டாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தாய்ப்பால் பாதுகாக்கிறது.
  3. தாய்ப்பால் சர்க்கரை மற்றும் புற்றுநோய் தாக்குதல்களுக்கு எதிராக போராடி குழந்தையை காக்கிறது.
  4. குழந்தைக்கு எந்தவித நோய்த்தொற்றுகளும் ஏற்படாவண்ணம் காக்கிறது.
  5. முழுமையான வளர்த்தி பெறாத குழந்தையின் செரிமான உறுப்புகள் எளிதில் செரிக்கக் கூடியதாக தாய்ப்பால் விளங்குகிறது; மேலும் இது குழந்தையின் உடலில் மலச்சிக்கல், டையேரியா, வயிற்று மந்தசம் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
  6. சரியாக தாய்ப்பால் அளிக்கப்பட்டு வளர்ந்த குழந்தைகளில் IQ எனும் அறிவுத்திறன் மேலோங்கிக் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன; மேலும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆயுள் அதிகமாக தாய்ப்பால் தவிர்க்க முடியாத பெரிய காரணமாக உள்ளது.

எப்பொழுது அளிக்க வேண்டும்?

எப்பொழுது அளிக்க வேண்டும்?

குழந்தை பிறந்த நொடி முதல் குறைந்தது 1 வருடம் அல்லது தாய்ப்பால் சுரப்பு நிகழும் வரை குழந்தைக்கு பாலூட்டலாம்; அதில் தவறில்லை. இவ்வாறு புரிவது குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிக்காத்து குழந்தைகளின் ஆயுளையும் அறிவையும் அதிகரிக்கும் என்றே கூறலாம். குழந்தைக்கு 0 முதல் 6 மாத காலம் வரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என தாய்ப்பால் அளிக்க வேண்டும்; அதாவது ஒரு நாளைக்கு 12 முறை கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். மேலும் 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு திட உணவுகள் அளிக்கத் தொடங்க வேண்டும்; அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு 6-8 முறை தாய்ப்பால் அளிக்க வேண்டும். உணவிற்கும் பாலுக்கும் இடையே சரியான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

எப்படி அளிக்க வேண்டும்?

எப்படி அளிக்க வேண்டும்?

தாய்ப்பால் அளிக்கும் பொழுது, தூய்மையான அறையில் இருக்க வேண்டும்; சுற்றியுள்ள பொருட்கள் மிகத் தூய்மையானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவ்வாறு இருந்தால் தான், அன்னையையும் குழந்தையையும் எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காது இருக்கும். குழந்தைக்கு பாலூட்டும் பொழுது வேறு எதையும் எண்ணாமல், வேறு எச்செயலையும் செய்யாமல் குழந்தையை மார்போடு அணைத்து, தோளோடு தோள் சேர்த்து அன்பு மற்றும் அரவணைப்பு வெளிப்படும் வண்ணம் பாலளிக்க வேண்டும்.

அன்னைக்கு என்ன லாபம்?

அன்னைக்கு என்ன லாபம்?

குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க, பெண்ணின் மார்பகங்களில் பால் சுரப்பு ஏற்படுகிறது; இது அன்னையின் உடலில் சர்க்கரை வியாதி, புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் தொடர்பான நோய்களை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. பால் குடிப்பது கால்சியத்தை உடலில் அதிகரித்து எலும்புகளை பலப்படுத்தும் என்று அறிந்திருக்கிறோம்; இங்கு பாலே உங்களில் இருந்து உருவாவதால், உங்கள் எலும்புகள் நன்கு வலுவாக இருக்க உதவி புரியும். மேலும் குழந்தையுடனான உறவை அதிக பலமாக்கும் பாலமாக தாய்ப்பால் கொடுக்கும் செயல் விளங்கும். தாய்ப்பால் அளிப்பது பிரசவத்தின் பொழுது ஏற்பட்ட உடல் எடையை குறைக்க உதவும்.

தாய்ப்பால் அளிக்கும் காலகட்டத்தில் குழந்தையின் வாயில் pacifier அல்லது புட்டிப்பால் அளிப்பதை தவிருங்கள்.