குழந்தைங்க அட்ராசிட்டி! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில புகைப்படங்கள்!! | Funny Images That reveled How kids are Smart

0
0

#1

குழந்தைகளை பால் குடிக்க வைப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது தாய்மார்களுக்கு தெரியும். அது என்ன மாயமோ சொல்லி வைத்தார் போல குழந்தைகளில் பலருக்கும் பால் தான் எதிரியாய் இருக்கிறது.

பால் தான் தன்னுடைய எதிரி என்று நினைத்த சிறுவன் ஃபிர்ட்ஜில் இருந்த பால் கேனை என்ன செய்து வைத்திருக்கிறான் என்று பாருங்கள்.

#2

#2

இந்த கட்டிடம் ஒரு குழந்தைகள் மருத்துவமனை லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த மருத்துவமனை. மருத்துவமனை என்றாலே அது சாப்பிடக்கூடாது இங்கே செல்லக்கூடாது விளையாடக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். கட்டுப்பாடுகள் நம் குழந்தைகளுக்கு பிடிக்குமா?

இதிலிருந்து தப்பிக்க நினைத்த ஒரு ஜீனியஸ் தன் அறையின் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் தகவலைப் பாருங்க!

#3

#3

லாஜிக்கான கேள்வி தானே…. அன்னையர் தினம் வந்தால் செல்ஃபி எடுத்து ஷேர் செய்வது தானே நம்மூர் குழந்தைகளின் வழக்கம் ஆனால் இங்கே பாருங்க.

அம்மா…. நான் இல்லன்னா உங்களுக்கு அன்னையர் தினமே கிடையாது. அதனால எனக்கு கண்டிப்பா கிஃப்ட் வேண்டும் என்று ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார்.

#4

#4

மேல் தளத்தின் பாத்ரூமிலிருந்து குழந்தை கத்தி அலறுகிறது. பெற்றோர் அந்த சத்தத்தை உணர்வதற்குள் குழந்தை படி அருகே வந்து sea தண்ணீர் என்று அழ….

மூன்று வயது குழந்தை பாத் டப்பில் அதிக தண்ணீர் நிரம்பியிருக்கும் என்றும், குழாய் மூட முடியாது இருந்திருக்கும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை நினைத்துக் கொண்டே சென்று பார்த்தால் அங்கே இருந்த தண்ணீரைப் பாருங்க

#5

#5

லீவு நாள்ல பாப்பா வீட்ல சும்மா இருக்குமே…. எதாவது செய்யட்டுமே என்று சொல்லி அம்மா பிரேசலெட் செய்வதற்கான கிட் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏழு வயதுடைய அந்த சிறுமி மறுநாள் காலை அம்மாவிடம் செய்து கொடுத்த பிரேஸ்லெட் தான் இது… இந்த வார்த்தைகளோட அர்த்தம் தெரிஞ்சு கோர்த்துச்சா இல்ல தெரியாம கோர்த்துச்சான்னு தெர்லயே….

#6

#6

சிறுவன் விளையாடச் சென்றுவிட்டு திரும்பியவனை பார்த்து அம்மா ஒரு கணம் அதிர்ந்தேவிட்டார். அவசரப்பட்டு காதை கடித்துக் கொண்டிருந்த பல்லியை தட்டிவிட அந்த சிறுவன் அழுதானாம்.

பல்லியை பார்த்து பயந்து அழுகிறான் என்று நினைத்தால் நீ ஏன் அதை தட்டிவிட்டாய் என்று அழுதிருக்கிறான். அதோடு தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் இடத்திலிருந்து இந்த தோடு அணிந்து வந்ததாகவும் நாளை பள்ளிக்கு சென்று காட்ட இருந்ததாகவும் சொல்லியிருக்கிறான்!

#7

#7

வீட்டிற்கு வருகிற கெஸ்ட்களுக்கு தண்ணீர் நிரப்பி வை தண்ணீர் கீழே சிந்தக்கூடாது என்று சொல்ல பையன் தெளிவாக தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் லட்சணம்.

தண்ணீரை பிடித்து எப்படி கவிழ்த்து வைத்தான் என்று தான் புரியாத புதிராக இருக்கிறது.

#8

#8

கீழே விழுந்துவிட்டால் அம்மா வந்து தூக்கிவிடட்டும் என்று விழுந்த போஸிலேயே ஆடாமல் அசையாமல் கிடப்போம். தூரமாக நின்று எழுந்திரு என்று எல்லாம் கத்தக்கூடாது தொட்டு தூக்கிவிட வேண்டும். சமாதானம் என்ற பெயரில் நமக்கு கிடைக்கிற திண்பண்டங்கள் என கணக்குப் போட்டு கார் கதவைதிறந்து கொண்டு படுத்திருக்கும் சிறுவன்.

#9

#9

விளையாட்டுக்கு டாட்டா போலாம் என்றோ உனக்கு டாய்ஸ் வாங்கித்தரேன் என்றோ அல்லது சாக்லெட் என்று எதுவும் உறுதி செய்துவிடக்கூடாது. அன்னக்கி சொன்ன…. என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு சமயம் பார்த்து நம்மை தாக்குவார்கள்.

இங்கே ஒருவர் தன் தம்பியிடம் நான் வேலைக்காக நியூயார்க் செல்லும் போது உனக்கு ஒரு செல்லப்பிராணி வாங்கி வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் தன் பரிசான செல்லப்பிராணி எங்கே எங்கே என்று கேட்டு சலித்துப் போன சிறுவன். உங்கள் பரிசுக்காக காத்திருந்து காத்திருந்து இப்படியாகிவிட்டேன் என்று சொல்லி இந்த போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறான்.

#10

#10

பயமுறுத்த இடமா கிடைக்கல? தாங்கள் செய்த வேலையை உடனே காண்பிக்க வேண்டும். உடனே சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மத்தியில் இருக்கும்.

தன் அம்மாவை சர்ப்ரைஸ் கொடுப்பதாய் நினைத்த சிறுவன் தான் வரைந்த ஓவியத்தை எங்கே ஒட்டிவைத்திருக்கிறான் பாருங்கள். தன் மகன் காலையிலிருந்து நாலைந்து முறை அம்மா டாய்லெட் போனீங்களா? என்று விசாரித்ததை தொடர்ந்து சென்று பார்த்திருக்கிறார்.

#11

#11

விளையாட போலாம் வெளிய கூட்டுட்டு போங்க… போன் கொடுங்க என்று சொல்லி எப்போதும் எதாவது நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள்.

முடிந்தவரையில் சமாளித்த பெற்றோர். இனி என்னிடம் வரக்கூடாது. வேலை முடியும் வரை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டார். உள்ளே சென்றவர் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வெளியே வந்த போது பார்த்த காட்சி தான் இது.

#12

#12

வீட்டில் நம் உறவினர்கள் மத்தியில் குழந்தைகளை கொஞ்சம் சமாளித்துவிடலாம். ஆனால் வெளியிடங்களில் அவர்கள் செய்யும் சேட்டையால் யாரென்றே தெரியாத நபர்களிடத்தில் எல்லாம் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியதாய் இருக்கும்.

பயணம் செய்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். விமானத்தில் சென்று கொண்டிருக்கிறோம். போர் அடிக்கிறது வெளிய போய் விளையாடலாம் என்று சொன்னால் அதிர்ச்சியடையாமல் என்ன செய்வது? இங்கே பாருங்கள் விமானத்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருக்கும் சிறுவன் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பவரை பயமுறுத்துகிறானாம்.

#13

#13

சீரியஸாக அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அடக்க முடியாமல் சிரிப்பு வருவது எல்லாம் தெய்வம் கொடுத்த வரம். அட சிரிச்சா கூட பரவாயில்ல இப்பிடி எல்லாம் யோசிச்சா என்ன பண்றது….

இது ஒண்ணும் ஹோட்டல் இல்ல. ஒழுங்க நீங்க சாப்பிடுற ப்ளேட்ட வந்து கழுவுங்க இல்ல இது ஹோட்டல் தான்னு நினச்சா ஹோட்டல்காரனுக்கு டிப்ஸ் கொடுக்குற மாதிரி டிப்ஸ் எடுத்து வைங்க என்று கோவமாக சொல்ல அருமை மகன் தன்னிடமிருந்த சில்லரைகளை எடுத்து வைத்து அம்மா எதற்கு இது என்று குழம்பிவிடக்கூடாது என்பதற்காக டிப்ஸ் என்று எழுதி வைத்துவிட்டு வேறு சென்றிருக்கிறான்.

#14

#14

சில நேரங்களில் நாம் சொல்கிற வார்த்தைகளை இம்மி பிசகாமல் எடுத்தால் இப்படித்தான் ஆகும். குழந்தையிடம் மாடிக்கு சென்று இந்த துணிகளை எல்லாம் வை என்று சொல்ல…. குழந்தை செல்லும் வழியிங்கும் வைத்திருக்கிறது.

அத்தனைக்கு அம்மா இது முதல் செல்ஃப் இது இரண்டாம் செல்ஃப் என்று சொல்லி அனுப்பிய ஆர்டரில் வைத்துவிட்டிருக்கிறது குழந்தை. வாவ்…. பேபி சொன்ன வேலைய கரெக்ட்டா செஞ்சுட்டா என்று பாராட்டிவிட்டு வெளியே வந்த அம்மாவுக்கு அதிர்ச்சியளித்த காட்சி இது.

#15

#15

ரொம்பத் தெளிவா இருப்பாய்ங்க போலயே…. ஸ்மார்ட் போன் நம்மளவிட இந்த காலத்து குழந்தைங்க தான் ரொம்ப வேகமா கத்துகிறாங்க…. நைட் தூங்கும் போது நோ கேம்ஸ் போன் பெட்ரூமுக்கு எல்லாம் கொண்டு போக கூடாதுன்னு அப்பா ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட அத மீற முடியாத குழந்த ஒகே டேடி நான் போன் வெளிய சார்ஜ்ல ல போட்றேன் என்று சொல்லி வெறும் கவரை வைத்து சென்றிருக்கிறான்.

பல நாட்கள் இப்படியே நடந்திருக்கிறது. எதேச்சையாய் குழந்தையின் ரூமுக்குள் நுழைய அங்கே கேம் விளையாடிக் கொண்டிருந்தவனை கையும் களவுமாக பிடித்த பிறகு தான் இது தெரிந்திருக்கிறது.