குப்பையில் மீட்கப்பட்ட குழந்தையை உரிமை கொண்டாடும் தம்பதி: மரபணு சோதனைக்குப் பின்னர் ஒப்படைக்க முடிவு

0
0

நாகர்கோவில் அருகே அருகு விளை தெற்கு தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து, நேற்று காலை 10.30 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள், குப்பைத் தொட்டி யில் கிடந்த பையை பிரித்துப் பார்த்தனர். அதில் பிறந்து சுமார் 8 மணி நேரமே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் கிடந்தது.அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் குழந்தையை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக குழந்தையை சேர்த்தனர். பிறந்து சுமார் 8 மணி நேரமே ஆன குழந்தை, 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

இத்தகவலறிந்த மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி கள் மருத்துவமனையிலும், குழந்தை மீட்கப்பட்ட அருகுவிளை யிலும் விசாரணை நடத்தினர். இதனிடையே, பறக்கையைச் சேர்ந்த வடிவேல் (40), அவரது மனைவி பார்வதி (35) ஆகியோர், தாங்கள்தான் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியதாக வும், ஏற்கெனவே தங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளதால், உறவினர்கள் கேலி செய்வார்கள் என நினைத்து, இந்த முடிவெடுத் ததாக தெரிவித்தனர்.

எனினும், அந்த தம்பதியிடம் மரபணு சோதனை நடத்திய பின் னரே, குழந்தையை அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து முடிவெடுக் கப்படும் என அவர்கள் தெரி வித்தனர்.