கீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு! | Keerthi Suresh To Play Mahanati For Balakrishna

0
0

சென்னை: பழம் பெரும் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். பயோபிக் படத்தில், சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ், இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் . இவரது வாழ்க்கை வரலாறு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

“என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தன் தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ். இவர் பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகாநடி படத்தில் இயக்குனர் நாகி ரெட்டியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அப்போது கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து வியந்த அவர், என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும், சாவித்திரி வேடத்திற்கு அவரே பொருத்தமானவர் என முடிவு செய்து விட்டாராம். எனவே, மீண்டும் ஒருமுறை கீர்த்தி, சாவித்திரி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.