கிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா..? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். | 8 Natural Beauty Secrets of Cleopatra

0
0

முக பூச்சு :-

நாம் இன்று பயன்படுத்துவது போன்று அவர் தேவையற்ற வேதி பொருட்களை தன் முக அழகிற்காக பயன்படுத்தவே இல்லை. அவர் முழுக்க முழுக்க இயற்கை அழகு சாதனங்களையே உபயோகித்தார். அதுவும் மிக மிக பிரத்தியேகமான ஒன்றே. இதனை தயார் செய்ய 2 ஸ்பூன் தேன் மெழுகுவை நன்கு சூடாக்கி அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். பிறகு அதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை சாறு மற்றும் 4 துளி ரோஜாவில் தயாரித்த எண்ணெய்யை ஊற்றி கலக்கவும். இந்த கிரீமையே கிளியோபாட்ரா தினமும் பயன்படுத்தி வந்தார்.

ஃபேசியல் மாஸ்க் :-

ஃபேசியல் மாஸ்க் :-

உலக அழகி கிளியோபாட்ரா அன்றாடம் பயன்படுத்தும் ஃபேசியல் மாஸ்க் என்னவென்று தெரியுமா..? சிறிது வெள்ளை களிமண்ணை 2 டீஸ்பூன் பால், 1 ஸ்பூன் தேன், மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும். பிறகு 10 நிமிடம் ஊற வைத்து முகத்தில் ஃபேசியல் மாஸ்க் போல 20 நிமிடம் போட்டு, பின் வெந்நீரில் முகத்தை கழுவி விடுவாராம். இதுவே அவரின் பளபளப்பான மென்மையான சருமத்திற்கு காரணமாம்.

முகத்தில் நோய்க் கிருமிகளை அழிக்க :-

முகத்தில் நோய்க் கிருமிகளை அழிக்க :-

முகம் எப்போதும் வெண்மையாக பாலை போல தூய்மையாக இருக்க அவர் பயன்படுத்திய அற்புத ஃபேஸ் பேக் இதுதான். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பின் இந்த மாஸ்க்கை 15 நிமிடம் முகத்தில் பூசி மசாஜ் செய்வாராம். இது அவரின் முகத்தில் எந்த அழுக்கும் சேராமல் சுத்தமாக வைக்குமாம். மேலும் முகத்திற்கு எந்தவித நோய் தொற்றையும் ஏற்படுத்தாதாம்.

கிளியோபாட்ராவின் இயற்கை ஷாம்பூ :-

கிளியோபாட்ராவின் இயற்கை ஷாம்பூ :-

முகம் அழகிற்கு மட்டும் கிளியோபாட்ரா ராணி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்துடன் சேர்த்து முடியின் அழகிற்கும் பெரிதும் கவனம் செலுத்தினாராம். இதற்காகவே அவர்கள் இயற்கை முறையிலான ஷாம்பூவையே எப்போதும் உபயோகிப்பார். முட்டையின் வெள்ளை கருவை எடுத்து முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முடியை மிக போஷாக்காக வைக்க உதவுமாம். மேலும் மருதாணி இலைகளை செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவுவாராம். இது முடியை எப்போதும் மென்மையாக வைக்குமாம்.

தங்க ஃபேஸ் மாஸ்க் :-

தங்க ஃபேஸ் மாஸ்க் :-

மிகவும் விலை உயர்ந்த ஃபேஸ் மாஸ்க் என்றால் அது கிளியோபாட்ரா பயன்படுத்திய தங்க ஃபேஸ் மாஸ்க்தான். முழுக்க முழுக்க தங்கத்தை உருக்கி அதனை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல உபயோகிப்பாராம். இதுவே அவரின் முக அழகுக்கு ஒரு முக்கிய பங்கு என ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முடி உடைதலை தடுக்க :-

முடி உடைதலை தடுக்க :-

3 ஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவவும். இது முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியான முடியை தரும். சில சமயங்களில் ஆலிவ் எண்ணெய்யை கூட அவர் தலைக்கு பயன்படுத்துவாராம். இந்த முறை முடிக்கு மிகவும் நன்மை தரும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்றும் இளமையாக இருக்க :-

என்றும் இளமையாக இருக்க :-

கிளியோபாட்ரா என்றும் இளமையாக தோற்றம் அளிக்க இந்த அழகு குறிப்பையே தினமும் செய்தாராம். குளியல் பாத்திரத்தில் பால் மற்றும் தேனை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து அதன்பின் அதில் குளியல் செய்வாராம். கடைசியாக உடல் மென்மையக இருக்க ரோஜா இதழ்களை அதில் இட்டு குளியலை முடிப்பாராம். இதுவே அவர் நீண்ட நாள் இளமையாக இருக்க உதவிய அழகு குறிப்பு.

தோல் பளபளக்க :-

தோல் பளபளக்க :-

வறண்ட தோலை மினுமினுப்பாக்க கிளியோபாட்ரா ஒரு ரகசிய முறையை அன்றே பயன்படுத்தினார். தோல் எப்போதும் ஈரப்பதமாக இருந்தால்தான் அழகான இளமையான தோற்றத்தை பெற முடியும். இதனை அடைய கற்றாழை சாற்றை தேனுடன் கலந்து உடல் முழுக்க தடவினாராம். கற்றாழை தோல் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைக்க உதவும்.

இத்தனை அழகையும் அவர் பெற இந்த அழகு குறிப்புகளே முக்கிய பங்காக இருந்தது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.