காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர்கள் 2 பேர் காயம்

0
0

காஷ்மீரின் தென் பகுதியிலுள்ள ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில், “ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் ஸ்ரீ நகரிலிருந்து 50கிமீ தொலைவில் உள்ள குண்டலன் கிராமத்தில்  இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு இல்லத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் சுற்றி வளைத்து தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு ராணு வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போலீஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது

முன்னதாக திங்கட்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.