காவல் துறை தொழில்நுட்ப பிரிவு 309 எஸ்.ஐ. பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

0
0

காவல் துறையில் காலியாக உள்ள 309 தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழக காவல் துறையில் கடந்த மே 31 நிலவரப்படி 1 லட்சத்து 24 ஆயிரத்து 235 போலீஸார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், சில பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடங்களை தேர்வு மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் படிப்படியாக நிரப்பி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொழில் நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் (சார்பு ஆய்வாளர்) 309 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணைய தளம் (www.tnusrbonline.org) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் 10.08.2018. விண்ணப்பதாரர்களுக்கு ஏதே னும் சந்தேகம் இருப்பின் 044 – 40016200, 044 – 28413658, 9499008445, 9176243899, 9789035725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படும்.