காலா வில்லன் பட திரைக்கதை எழுத்தாளர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை | Screenplay writer commits suicide

0
0

மும்பை: மும்பையில் 32 வயது திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் உள்ள செவன் பங்களாஸ் பகுதியில் வசித்து வந்தவர் ரவி ஷங்கர் ஆலோக்(32). அவர் தனது சகோதரருடன் தங்கியுள்ளார்.

காலா பட வில்லன் நானா படேகரின் அப் தக் சாப்பான் படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் ஆலோக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று இரவு 2 மணி அளவில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சகோதரர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஓராண்டு காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார் ஆலோக். இதனால் அவர் மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனஅழுத்தத்திற்கு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.

ஆலோக் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.