காலா படத்தின் வெற்றி ரஜினி அரசியலை தீர்மானிக்குமா

0
24
ஒரு படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது என்றும் மக்களும் ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரஜினியின் காலா படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
ஒரு படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது. ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வது என்பது அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன என்று கூறினார்.
ரஜினிகாந்த், போராட்டயவர்களை சமூக விரோதிகள் என்றும் போராட்டம் கூடாது என்றும் தனது கருத்தை பதிவு செய்தார். அவரது இந்த கருத்து காலா படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காலா படம் வெளியான முதல் நாள் அவரது ரசிகர்களை தவிர மற்ற மக்கள் படத்தை புறக்கணித்தனர்.
முதல் நாளே திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது. கபாலி படம் வெளியான போது கூட்டம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலா படத்திற்கு அதுபோன்ற கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினி, எம்.ஜி.ஆர் பாணியில் படங்கள் மூலம் மக்களிடத்தில் தன்னை ஒரு தலைவான உருவாக்கி வருகிறார் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
இதைவைத்து அமைச்சர் ஜெயக்குமார் படம் வெற்றி மூலம் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.