கார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி! | trisha dream finally comes true

0
0

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் திரிஷா ஒரு நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிக்கு மற்றொரு ஜோடியாக நடிகை திரிஷாவும் இப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் திரிஷா மற்றும் சிம்ரனின் நீண்ட நாள் கனவு தற்போது நிஜமாகியுள்ளது.

அதாவது தமிழில் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரன் என இருவருமே ரஜினி தவிர மற்ற முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் நடிப்பது என்பது இவர்களது நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அவர்களது இந்த ஆசையும் கார்த்திக் சுப்புராஜ் படம் மூலம் நிறைவேறவுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்