காமாட்சி ஒரு பொறுக்கி, பியூஷ் மனுஷ் தலைமை பொறுக்கி: கரு. பழனியப்பன் | Piyush Manush is Thalaimai Porukki: Karu. Pazhaniappan

0
0

பியூஷ் மனுஷ்

ராதாரவி சார் போன் செய்து இயக்குனர் போன் பண்ணுவார் என்றார். இயக்குனர் போன் செய்து பொறுக்கீஸ் அல்ல நாங்கள் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு கூறினார். முதலில் என் காதில் பொறுக்கீஸ் மட்டும் தான் கேட்டது. அல்ல நாங்கள் என்பதை கேட்காத மாதிரி தேச்சுத் தான் கூறினார். பொறுக்கீஸ் என்றதும் அந்த பொறுக்கி லிஸ்டில் நம்மை அழைத்துள்ளார்கள் போன்று என்று நினைத்து வேறு யாருங்க என்று கேட்டதற்கு காமாட்சியை கூப்பிட்டிருக்கிறேன் என்றார். சரி அடுத்த பொறுக்கி அப்புறம் பியூஸ் மனுஷை கூப்பிட்டிருக்கிறேன் என்றார். ஆஹா தலைமை பொறுக்கி அப்பன்னா அந்த லிஸ்டு தான் போல இருக்கு என்று நினைச்சேன்.

இயக்குனர்

இயக்குனர்

ராதாரவி சார் வியப்புக்குரியவர் என் மரியாதைக்குரியவர். அப்படிப்பட்ட ராதாரவி கூப்பிட்டு இது முக்கியமான படம்பா என்றதும் தான் படம் பற்றியும், இயக்குனர் பற்றியும் ரொம்ப உயர்வாக நினைத்தேன். இயக்குனர் வந்து பேசும்போது இது ஒரு சாதாரண படம் என்றார். இப்படி கேட்டே ரொம்ப நாளாச்சு. உலகத்தில் அவனவன் நான் எடுத்தது தான் காவியம் இந்த வெள்ளிக்கிழமையோடு உலகம் மாறப்போகுது என்று சொல்லிக்கிட்டிருக்கும் காலத்துல அதெல்லாம் ஒன்னும் இல்லங்க ஒரு படம் எடுத்திருக்கிறேன் அந்த செய்தியை சொல்லுணும்னு நினைச்சேன் என்று சொல்கிறார்ல அது தான் ஒரு படைப்பின் அடிப்படை.

சமூகம்

சமூகம்

இன்றைக்கு அவசியமான செய்தியை இந்த படத்தில் சொல்கிறேன் என்கிறார் மஞ்சுநாத். ட்ரெய்லரை பார்த்தால் அது தெரிகிறது. சமூகத்தின் மேல் இருக்கிற அதிருப்தியை நாம எல்லாரும் சொல்லணும், அவரவர் செய்கின்ற வேலையில் சொல்லணும், வேலை இல்லைனா கிடைக்கிற மேடையில் சொல்லணும், மேடை கிடைக்கலைனா நாம் கூடும் இடத்தில் சொல்லணும். எங்கயாவது ஒரு இடத்தில் நாம் சொல்லிகிட்டே இருக்கணும். அப்படி சொல்வதால் தான் பியூஷ் மனுஷ் மீது கேஸ் போட்டிருக்கிறார்கள். அவர் போராட்டம் எல்லாம் பண்ணல. ஃபேஸ்புக்கில் பேசியதற்காக உளுந்தூர்பேட்டையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கேஸ் போட்டுள்ளார். இப்ப அவர் உளுந்தூர்பேட்டையில் வேற போய் கையெழுத்து போடணும்.

வழக்கு

வழக்கு

பியூஷ் மனுஷ் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி தமிழ்நாடு முழுக்க நீங்கள் பஸ் பாஸ் வாங்கி வச்சுக்கலாம். ஊர் ஊராக போய் கையெழுத்து போடுவதற்கு. ஒரு காலகட்டத்தில் மன்னனுக்கு பிடிக்காத வேலையை யாராவது செய்தால் அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அது தான் அவனுக்கு தண்டனையாக இருக்கும். யாரும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது தான் பெரிய தண்டனையாக இருக்கும். அதன் பிறகு ஊர் பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தது தண்டனையாக இருந்தது. அவன் எதிர்த்து பேசியதற்கு இது தண்டனை என்றார்கள்.

நாகரீகம்

நாகரீகம்

பின்னர் மனித சமூகம் நாகரீகம் அடைய அடைய கரண்ட்டை கட் பண்ணுவது தான் தண்டனையாக இருந்தது. இன்றைய அரசாங்கம் எந்த ஊரில் எவன் உரிமைக்காக குரல் கொடுத்தாலும் அந்த ஊரில் இன்டர்நெட்டை கட் பண்ணிவிடுகிறது. அப்போ அடிப்படை தேவை மின்சாரமாக இருந்தது. தற்போது அடிப்படை தேவை இன்டர்நெட்டாக உள்ளது. இந்த இன்டர்நெட் மூலமாகத் தானே எல்லா செய்தியையும் பரப்புறாங்க முதலில் இன்டர்நெட்டை கட் பண்ணு என்கிறார்கள்.

அரசு

அரசு

மிகச்சிறந்த அரசாங்கம் எது என்று வள்ளுவன் சொல்றான்…

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’ என்கிறான்.

ஒரு அரசை மக்களுக்கு எப்போ பிடிக்கும், யாரு விரும்புவா, எந்த அரசை மக்கள் விரும்புவாங்கன்னா ராதாரவி, பியூஷ் மனுஷ் பேசுவது மாதிரி, காமாட்சி பேசுற மாதிரி, இந்த படத்தின் இயக்குனர் மஞ்சுநாத் பேசுவது மாதிரி சொற்கள் கடுமையாக இருந்தால் கூட பரவாயில்லை நாம் அதை எல்லாம் கேட்டுக்கணும் என்று நினைக்கிற அரசாங்கம் தான் மக்களுக்கு விருப்பமான அரசாங்கமாக இருக்குமாம். இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கா இல்லையான்னு நீங்களே யோசிங்க என்றார் பழனியப்பன்.