காபியில் தாய்ப்பால் சேர்த்தால் என்ன ஆகும்னு தெரியுமா?… | 6 Surprising Natural Uses For Breast Milk

0
0

தாய்ப்பால் பற்றிய ஆய்வு

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மற்றும் தாய்க்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கிறது. நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தேசிய நோய்த்தடுப்பு ஆய்வு மையங்களின்படி, அமெரிக்காவில் 2006 இல் பிறந்த குழந்தைகளில் 73.9 சதவீதத்தினர் தாய்ப்பால் குடித்தனர் – 43.4% குழந்தைகள் ஆறு மாதம் வரை தாய்ப்பால் குடித்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம், குழந்தைகளுக்கு இரண்டு வயது பூர்த்தி அடையும் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

அதற்கு மேலும் அவர்களின் ஊட்டச்சத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு தாய்ப்பால் புகட்டும் காலத்தை நீட்டிக்கலாம் என்றும் கூறுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களும் நன்மை அடையலாம். தாய்ப்பாலின் நன்மை தாய் மற்றும் குழந்தையைக் கடந்து பெரியவர்களுக்கும் சென்றடைகிறது. மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காப்பதற்கும் தாய்ப்பால் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

சமீபத்தில் சீனாவில், தாய்ப்பாலை வளமான பானம் என்று அறிவித்திருக்கிறார்கள். சீனாவில், ஷெஞ்சென், குவாங்டாங் மாகாணத்தில் வசித்தவர்கள் மத்தியில் பலவீனமாக இருப்பவர்களுக்கு இந்த தாய்ப்பால் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஆரோக்கியமாக மாறியிருக்கிறார்கள். சீனாவின் சில பகுதிகளில், மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிற மக்களுக்கு தாய்ப் பால் சிறந்த ஊட்டச்சத்து அளிப்பதாக நம்புகிறது என்று தெற்கு மெட்ரோபோலிஸ் டெய்லி அறிக்கையிடுகிறது.

தாய்ப்பாலில் நோயெதிர்ப்பு பொருட்கள் உள்ளன. அவை IgG, IgA, IgM, IgD and IgE போன்றவையாகும். இவை கசிவு சார்ந்த IgA மூலக்கூறுகள் ஆகும். இவை அழற்சி ஏற்படுத்தாமல் நோய்களை எதிர்த்து போராடுகின்றன. இதன் காரணமாக தாய்ப்பால் பருகும் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று, இரைப்பை கோளாறு, மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் போன்றவற்றில் இருந்து எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஐரோப்பிய ரெஸ்பிரேடரி பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 5,000 க்கும் அதிகமான பள்ளி படிப்பு தொடங்காத ப்ரீ ஸ்கூல் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளை வளர்ப்பதில் ஏற்படும் அபாயங்கள் தொடர்பாக தாய்ப்பால் காலத்திற்கு இடையேயான தொடர்பை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகள், ஒன்று முதல் மூன்று வயது வரை இருக்கும் குழந்தைகளில், குறுகிய காலத்திற்கு அதாவது ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் பருகிய குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறி மிகவும் குறைவாக இருப்பதாகவும், மற்றவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறி அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

பெரியவர்களும் தாய்ப்பால் பருகுவதால் ஆஸ்துமா அறிகுறி அதிகரிப்பதில்லை, மாறாக, தாய்ப்பாலை பருகுவதால், ஒரு மருத்துவ சிகிச்சையின் பலனை அடையலாம் என்பது தெரிய வருகிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட, தாய்ப்பாலை பயன்படுத்துவதால் ஆஸ்துமா அறிகுறி குறைகிறது. ஒருவேளை, குழந்தைக்காக எடுத்து வைத்த தாய்ப்பால் மீதம் இருந்தால் அதனை வீணாக்காமல் பெரியவர்கள் எடுத்துப் பருகலாம். இது நன்மையைத் தரும்.

காது சிகிச்சைக்கு

காது சிகிச்சைக்கு

காதில் ஏற்படும் தொற்று அல்லது பாதிப்பு ஆறு மத குழந்தை முதல் ஏற்படலாம். என்று மேரிலன்ட் மருத்துவ மைய பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. இயற்கை முறையில் இந்த வலியைக் குறைக்க குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிப்பு ஏற்பட்ட காதில் சில துளிகள் தாய்ப்பால் விடுவது நல்லது.

காதின் கால்வாய் பகுதியில் தாய்ப்பால் விடுவதால், தாய்ப்பாலில் உள்ள நோயெதிர்ப்பு பொருள், உள்ளுக்குள் வினை புரிந்து வலியைக் குறைக்கிறது என்று மருத்துவர். ஜோசப் மேர்கோலா கூறுகிறார். குழந்தையின் காதுக்குள் மூன்று அல்லது நான்கு துளிகள் தாய்பால் விடுவது நல்லது. குறிப்பாக நேராக காதின் உட்பகுதியில் பாலை விடாமல், காதின் கால்வாய் வழியாக விடுவது நல்லது.

கண் சிகிச்சைக்கு

கண் சிகிச்சைக்கு

தாய்மார்கள் பொதுவாக கண்களில் ஏற்படும் கிருமி, பக்டீரியா தொற்று அல்லது ஒவ்வாமை பாதிப்பு காரணமாக உண்டாகும் அழற்சியைக் குறைக்க தாய்ப்பாலை பயன்படுத்துவார்கள். குறிப்பாக கண்கள் சிவந்து இருக்கும்போது, ப்ரோபயோடிக் உள்ள, அமிலம் அல்லாத திரவத்தைக் கொண்டு இதற்கான சிகிச்சையளிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் இத்தகைய கண் பாதிப்பை போக்குவதற்கு தாய்ப்பால் மிகச் சிறந்த தீர்வு என்று கூறப்படுகிறது.

கண்களில் இரண்டு சொட்டு தாய்ப்பால் விடுவதால், கண் தொற்று உடனடியாக சரியாகி விடும் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் டேப்பி டோனோவன் என்னும் சான்றளிக்கப்பட்ட பாலூட்டல் ஆலோசகர் கூறுவதாவது, பல காலங்களாக கண்களில் ஏற்படும் அழற்சிக்கு தாய்ப்பால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதனை பயன்படுத்தும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது என்பதாகும். காண்டக்ட் லென்ஸ் சுத்தம் செய்வதற்கு தாய்ப்பாலை பயன்படுத்தலாம்.

தொண்டை பாதிப்புகளைப் போக்க

தொண்டை பாதிப்புகளைப் போக்க

தொண்டை வறட்சி ஏற்படும்போது தாய்ப்பால் பருகுவது அல்லது தாய்ப்பால் கொண்டு கொப்பளிப்பது போன்றவை நல்ல பலனைத் தருகிறது. பிறந்த குழந்தைக்கு தொண்டை வறட்சி உண்டாகும்போது, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அந்த அறிகுறி குறையத் தொடங்கும்.

எரிச்சல், அரிப்பு போன்ற உணர்வைப் போக்க ஒரு மருந்து தாய்ப்பால்

உங்கள் உடலில் ஏற்பட்ட வெட்டு அல்லது காயத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்பட்டால், அதனைப் போக்க தாய்ப்பாலை பயன்படுத்தலாம். வெட்டு அல்லது காயம் உள்ள இடத்தில் சில துளி தாய்ப்பால் தடவுவதால், அந்த காயத்தில் உள்ள எரிச்சல் குறைந்து காயம் குணமாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு கூறுகள் குறிப்பாக IgA ஹ்ட்டைபாளில் உள்ளதால், கிருமிகள் தடுக்கப்பட்டு, காயம் எளிதில் குணமடைகிறது.

பேஷியல் க்ளென்சராக

பேஷியல் க்ளென்சராக

சருமத்தில் கட்டி அல்லது வேறு கோளாறுகள் இருந்தால், அவற்றைப் போக்க ஒரு சிறந்த தீர்வு தாய்ப்பால். லாரிக் அமிலம், பதின் வயதில் உண்டாகும் பருக்களைப் போக்க வல்லது என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி, திசையா கூறுகிறார்.

கட்டிகளை நீக்குவதற்கு, முகத்தை நீரால் சுத்தம் செய்தபின், தாய்ப்பாலை உங்கள் முகத்தில் தடவி காய விடுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவலாம். பேஷியல் க்ளென்சர் போன்று பயன்படுத்த, முகம் முழுவதும் தாய்பாலை தடவி, சிறிது நேரம் கழித்து அதனை ஒரு துண்டால் துடைத்து விடலாம்.

சமையலில் மூலப்பொருளாக

சமையலில் மூலப்பொருளாக

காபி மற்றும் கஞ்சியில் பசும்பாலுக்கு மாற்றாக தாய்ப்பால் சிலரால் சேர்க்கப்படுகிறது. தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகள் வழக்கமான பாலில் இருப்பதில்லை. தாய்ப்பாலில் இருக்கும் ஹாம்லெட் என்னும் அல்பா லக்டால்புமின் என்னும் கூறு திசுக்களில் உண்டாகும் கட்டிகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளது. இது 40 வகையான புற்று நோய் அணுக்களைக் கொல்வதாகவும் பரிசோதனைகள் கூறுகின்றன என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தாய்ப்பாலின் நன்மையை புரிந்து கொண்டீர்களா? இனி குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கு தாய்ப்பால் சிறந்த பலனைத் தருகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம்.