கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ‘எஃப்’ வார்த்தை பயன்படுத்திய இலியானா | Ileana’s bold move

0
0

மும்பை: தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.

தெலுங்கு திரையுலகின் ராணியாக இருந்த இலியானா பாலிவுட்டில் செட்டிலானார். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லை.

அந்த காரணத்தால் மீண்டும் டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கருத்து கந்தசாமிகளாக மாறி கமெண்ட் போடுவார்கள் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. அதனால் தான் புகைப்படத்தோடு சேர்த்து அவரே கருத்தும் கூறியுள்ளார்.

எவன் கருத்து சொன்னால் எனக்கென்ன என்பது போன்று கருத்து தெரிவித்துள்ள இலியானா எஃப் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இலியானாவுக்கும், அவரது காதலர் ஆன்ட்ரூ நீபோனுக்கும் திருமணமாகிவிட்டது என்று கடந்த சில மாதங்களாக பேசப்படுகிறது.

திருமணமாகிவிட்டதா என்று யாராவது இலியானாவிடம் கேட்டால் அம்மணிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறதாம்.