கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்கா

0
59

நடிகை அனுஷ்கா கடந்த 13 வருடங்களாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என தனது உடல் எடையை கூட்டி கடந்த 2015-ம் ஆண்டு சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தால் வந்தது அம்மணியின் திரைப்பயணத்துக்கு வேட்டு. ஆம், ஏறிய உடல் எடை குறையாமல் போனதால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது தான் உடல் எடையை ஓரளவுக்கு குறைத்துள்ளார். ஆனாலும், சிறு சிறு உடல் உபாதைகள் அம்மணியை வாட்டி வதைக்கிறதாம். கேரளவிற்கு சென்று இயற்கை வைத்தியம் பெற்று திரும்பிய பிறகு இப்போது பரவாயில்லை.

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தெலுங்கில் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்கவுள்ளார் எனவும். இந்த படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, வானம் படத்தில் விலைமாதுவாக நடித்திருப்பார் அனுஷ்கா. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக விலைமாது வேடத்தில் நடிக்க முன்வந்துள்ளார். ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டி நடிக்கவுள்ளார் அனுஷ்கா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இனிமேல், அனுஷ்காவின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான். திருமணம் செய்து கொண்டு செட்டிலாக போகிறார் என்று எண்ணியிருந்தர்கள் முன்னணி நடிகைகள். ஆனால், அனுஷ்கா இப்படி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியிருப்பதை கண்டு ஷாக் ஆகித்தான் போயுள்ளர்களாம்.