கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேர் கைது

0
0

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் வறண்டுபோன கிணற்றிலிருந்து அழுகிய சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் இளம்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த, கச்சிராயப்பாளயம் போலீஸார், இளம்பெண்ணின் இறப்புக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், கள்ளக்குறிச்சியில் உள்ள நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த இளம்பெண்ணுக்கு, கச்சிராயப்பாளையத்தை அடுத்த காமராஜ் காலனியைச் சேர்ந்த குணசேகரன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஜூலை 28-ம் தேதி இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் சென்று, அவரை அழைத்துள்ளார். இதையடுத்து அப்பெண் வீட்டிலிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் அருகிலுள்ள செட்டியார்காடு பகுதிக்குச் சென்று குணசேகரன் மது அருந்திய நிலையில் அப்பெண்ணை பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இளம்பெண் கொண்டுவந்த பணத்திலிருந்து ரூ.4 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, மதுபாட்டில்கள் மற்றும் தனது பைக்குக்குத் தேவையான பொருட்கள் வாங்கிவந்துள்ளார். அப்போது தனது நண்பர்களான கோமுகிதாசன் (22), ரத்தினம் (24) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை அழைத்துள்ளார். அவர்களும் காட்டுப் பகுதிக்குச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றபோது, இளம்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து, துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளனர். இதில் மயக்கமுற்ற இளம்பெண்ணை, குணசேகரனின் நண்பர்களும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் இளம்பெண்ணின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து, அதே பகுதியில் உள்ள பயனற்ற வறண்டுபோன கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

இதனிடையே இளம்பெண்ணின் உறவினர்கள், அவரைத் தேடி கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், புதன்கிழமை கச்சிராயப்பாளையம் செட்டியார் காடு பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து இளம்பெண்ணை கொலை செய்ததாக குணசேகரன், ரட்சகன், கோமுகிதாசன் மற்றும் சிறுவன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.