கர்நாடக அமைச்சரவையில் இவருக்கு இந்த இடமா

0
17

கர்நாடகத்தில் அமைச்சரவையில் யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முழு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியையும் அக்கட்சிக்கே வழங்கியது. அதன்படி முதல்வராக தேவகௌடா மகன் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது.

எச்டி குமாரசாமி – முதல்வர் , அமைச்சரவை விவகாரங்கள் துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நிதி, கலால், புலனாய்வு, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, திட்டமிடுதல் மற்றும் எரிசக்தி துறை

 • ஜி. பரமேஸ்வரா– துணை முதல்வர், உள்துறை (புலனாய்வு துறை நீங்கலாக), பெங்களூர் வளர்ச்சி துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை
 • எச்.டி. ரேவண்ணா– பொதுப் பணித் துறை (துறைமுகம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து )
 • ஆர்வி தேஷ்பாண்டே– வருவாய் துறை, திறன் மேம்பாடு
 • பண்டீப்பா காஷேம்பூர்– கூட்டுறவு துறை
 • டி.கே. சிவக்குமார்– மருத்துவக் கல்வித் துறை, பெரிய மற்றும் நடுத்தர பாசனம்
 • ஜிடி தேவகௌடா– உயர்கல்வித் துறை
 • கேடி ஜார்ஜ்– சிறு மற்றும் பெரு தொழில்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பத் துறை
 • டி.சி. தம்மன்னா– போக்குவரத்து துறை
 • கிருஷ்ணே பைரேகௌடா- ஊரக வளர்ச்சி, சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள், சட்டசபை விவகாரங்கள் துறை
 • மங்குளி மல்லப்பா சன்னவீரப்பா– தோட்டக் கலை துறை
 • என்.எச். சிவசங்கர ரெட்டி– வேளாண்துறை
 • எஸ்ஆர் ஸ்ரீனிவாஸ் வாசு– சிறு தொழில்கள் ரமேஷ் ஜர்கிஹோலி- நகராட்சி மற்றும் உள்ளாட்சி, துறைமுகம் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து
 • வெங்கட்ராவ் நாடகௌடா– கால்நடை துறை பிரியங்க கார்கே- சமூக நலன்
 • சி.எஸ்.புட்டுராஜு– சிறு பாசனம் யூடி காதர்- நகர நிர்வாகம் (பெங்களூர் மற்றும் வீட்டு வசதி துறை தவிர்த்து)
 • சா.ரா. மகேஷ்– சுற்றுலாத் துறை, பட்டுப்புழு வளர்ப்பு
 • ஜமீத் அகமது கான்– உணவு மற்றும் விநியோகத் துறை, சிறுபான்மை , வக்ஃபு வாரிய துறை
 • என் மகேஷ்– முதன்மை மற்றும் உயர்நிலை கல்வி சிவானந்த் பாட்டில் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை
 • வெங்கடரமணப்பா– தொழிலாளர் நலன்
 • சி புட்டரங்கா ஷெட்டி– பிற்படுத்தப்பட்டோர் நல துறை
 • ஆர் சங்கர்– வனத்துறை, சுற்றுச்சூழல் ,சூழலியல் துறை
 • ஜெயமாலா– பெண்கள் மற்றும் குழ்நதை நலன், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் துறை