கருப்பன் குசும்புக்காரன் ஓசியில விளம்பரம் தேடப் பார்க்குறான் #TP2 | Tamizh Padam 2’s smart work for free publicity

0
0

சென்னை: தமிழ் படம் 2 குழு தங்கள் படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடப் பார்க்கிறது.

தமிழ் படம் 2 வரும் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே படத்தில் அரசியல்வாதிகள், துணை முதல்வர், திரையுலக பிரபலங்கள் என்று பலரையும் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

அந்த காரணத்தினாலேயே படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.

விளம்பரம்

ஏற்கனவே ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் கலாய்த்து விளம்பரம் தேடியது போதாது போல. நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் ஜி.எஸ்.டி. பற்றி பேசியுள்ளார் சிவா.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி கருத்தால் மெர்சல் படத்திற்கு எப்படி சூப்பராக இலவசமாக விளம்பரம் கிடைத்து படம் ஹிட்டானது என்பது தமிழ் படம் 2 இயக்குனர் அமுதனுக்கு மட்டும் தெரியாதா என்ன? அதனால் தான் தன் படத்திலும் ஜிஎஸ்டி வசனத்தை வைத்து விட்டார் போன்று.

அமுதன்

அமுதன்

மெர்சலுக்கு கிடைத்த இலவச விளம்பரத்தை பார்த்து ஆளாளுக்கு விளம்பரம் கொடுக்குமாறு கேட்கத் துவங்கிவிட்டனர். அதனால் அமுதா, உங்களின் கணக்கு தப்புக் கணக்காக போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

அமித்ஷா

அமித்ஷா

ஜிஎஸ்டி வசனம் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்து கூடுதலாக 2 பிட்டு போட்டுள்ளார் அமுதன். உங்களின் வங்கி கணக்குகளில் ரூ. 15 லட்சம் போடுகிறேன் என்று மோடியையும், #GoBackSanthanaBarathi என்ற ஹேஷ்டேக்கை போட்டு அமித் ஷாவையும் கலாய்த்துள்ளனர். சந்தான பாரதியும், அமித் ஷாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக அனைவரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படம் 2