கருணாநிதி நினைவிடத்தில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி: குடிநீர், உணவு விநியோகம்

0
0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ஆயிரக்கணக்காண தொண்டர்கள், பொதுமக்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கடந்த 8-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நேற்று காலை முதலே மழையையும் பொருட் படுத்தாமல் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, கருணா நிதியின் உதவியாளர் சண்முக நாதன், நடிகர்கள் மயில்சாமி, தியாகராஜன், பிரசாந்த், மனோபாலா, போஸ் வெங் கட், பாடகர்கள் அனிதா குப்பு சாமி, புஷ்பவனம் குப்பு சாமி, முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் ஆகியோரும் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மதிய உணவு, குடிநீர் ஆகி யவை வழங்கப்பட்டன. பொது மக்களின் வசதிக்காக நினை விடம் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீஸார் அனுமதித்தனர். அண்ணா நினைவிடம் முன்பு போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கருணாநிதியின் நினை விடத்துக்கு நேற்று மாலை வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தந்தையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவ ருடன் ஏராளமான மகளிர் அணியின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். இரவு வரையும் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.