கமலுக்கு ஒரு நாள் முன்னதாக மக்களைச் சந்திக்க தயாராகும் ஹரீஷ்-ரைசா! | ‘Pyaar Prema Kaadhal’ to release on August 9

0
0

சென்னை: பியார் பிரேமா காதல் படம் திட்டமிடப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜாவும், ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 10ம் தேதி ரிலீசாகாமல், ஒரு நாள் முன்னதாக 9ம் தேதியே இப்படம் ரிலீசாக இருக்கிறது.

இது குறித்து ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகிறது.

ஆகஸ்ட் 10ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படம் ரிலீசாகிறது. இதனால், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் ஒரு வாரம் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், பியார் பிரேமா காதல் ஒரு நாள் முன்கூட்டியே ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

பியார் பிரேமா காதல்

ரைசா வில்சன்