கன்னட சினிமாவில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி!

0
0
விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நபர். மேலும், இவரது எதார்த்த நடிப்பினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர். 

 

தற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜுங்கா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் கைவசம் சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களை  வைத்துள்ளார்.
 

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். 
 

சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.