கதறிக் கதறி அழுத ஐஸ்வர்யா, ஜனனி: சத்தியமா இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கல பிக் பாஸ் | Shariq gets eliminated

0
0

சென்னை: ஷாரிக்கை இப்படி திடீர் என்று வெளியேற்றுவார்கள் என பார்வையாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் ஷாரிக் கடைசி வரை இருப்பார் என்றே பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஏன், அவர் பிக் பாஸ் டைட்டிலை வெல்லக்கூடும் என்று கூட எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அவர் அச்சு அசலாக ஆரவ் போன்றே நடந்து கொண்டார்.

ஷாரிக்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் ஷாரிக் என்று கமல் ஹாஸன் கூறியபோது அவர் ஐஸ்வர்யாவிடம் விளையாடுகிறார் என்றே முதலில் அனைவரும் நினைத்தனர். ஐஸ்வர்யாவை அழ வைத்த பிறகு ஷாரிக் காப்பாற்றப்பட்டார் என்று கமல் கூறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

எலிமினேஷன்

எலிமினேஷன்

ஷாரிக் வெளியேறுகிறார் என்று கமல் கூறியதும் காரணமே இல்லாமல் சும்மா அவரை நாமினேட் செய்த ஜனனி தேம்பித் தேம்பி அழத் துவங்கிவிட்டார். யாஷிகாவால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஐஸ்வர்யாவோ தயவு செய்து ஷாரிக் இங்கு இருக்கட்டும் என்று கமல் மற்றும் தமிழக மக்களிடம் கெஞ்சினார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஷாரிக் கிளம்பியதை பார்த்த ஐஸ்வர்யா கதறிக் கதறி அழுதார். பேட்டா சென்றதை பார்த்த மும்தாஜும் அழுதார். மகத்துக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்துவிட்டது. ரித்விகா, வைஷ்ணவி ஆகியோர் மட்டும் தான் அழாமல் சிரித்துக் கொண்டே ஷாரிக்கை வழி அனுப்பி வைத்தார்கள். கடைசியாக மும்தாஜ் கையால் டீ போடச் சொல்லி குடித்துவிட்டு கிளம்பினார் ஷாரிக்.

தனி அறை

தனி அறை

ஒரு வேளை வைஷ்ணவி போன்று ஷாரிக்கையும் தனி அறையில் தங்க வைக்கப் போகிறார் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி இல்லாமல் நேராக கமலை பார்க்க மேடைக்கு வந்துவிட்டார் ஷாரிக்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்த வாரம் யாரை காப்பாற்றலாம் என்று கமல் கேட்டதற்கு பல போட்டியாளர்கள் ஷாரிக்கின் பெயரை தான் தெரிவித்தனர். அப்படி இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். எப்பொழுதுமே பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாக செய்வதையே வழக்கமாக வைத்துள்ள பிக் பாஸ் ஷாரிக்கை அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.