கண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா? | big boss 2 tamil who will be evicted today

0
0

தனிமைச் சிறை:

ஆனால், வைஷ்ணவியை வெளியேற்றுவது போல் நாடகமாடி விட்டு, பிக் பாஸ் வீட்டிலேயே ரகசிய அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த அவர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ரித்விகா சேஃப்:

ரித்விகா சேஃப்:

இந்நிலையில், இந்த வார எவிக்சனும் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. காரணம் மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஷாரிக், மஹத் மற்றும் ரித்விகா என ஆறு பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ரித்விகாவை நேற்றே கமல் காப்பாற்றி விட்டார்.

மும்தாஜ்:

மும்தாஜ்:

எனவே, மீதமுள்ளவர்களில் இன்று யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பொன்னம்பலமும், மும்தாஜும் தொடர்ந்து சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களை பிக் பாஸும், மக்களும் சேர்ந்து காப்பாற்றி வருகின்றனர்.

அழும் ஜனனி:

அழும் ஜனனி:

இந்த சூழ்நிலையில் எவிக்சன் தொடர்பாக இன்று விஜய் டிவியில் வெளியாகியுள்ள புரோமோவில், ‘புலி நிஜமாகவே இங்கு வருகிறது’ என்கிறார் கமல். அவர் கூறியதைக் கேட்டு ஜனனி, யாஷிகா, மும்தாஜ் மற்றும் ஐஸ் ஆகியோர் அழுகின்றனர். இதைப் பார்க்கும் போது ஷாரிக் அல்லது மஹத், இவர்களில் ஒருவர் தான் இன்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் எனத் தெரிகிறது.

சாத்தியமில்லை:

சாத்தியமில்லை:

நேற்று முன் தினம் தான் வீட்டின் தலைவராகி இருக்கிறார் ஷாரிக். அடுத்தவாரம் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது பிக் பாஸ் உத்தரவு. அப்படி இருக்கையில் அவரை நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேற்றுவது சாத்தியமில்லை.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

ஆனால், நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஷாரிக், தொடர்ந்து குடும்பப் பெயரை கெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல, மக்களிடையேயும் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. எனவே, மேலும் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் அவர் வீட்டை வெளியேறலாம் என நம்பப்படுகிறது.

அந்தப் புலி மஹத்தா?

அந்தப் புலி மஹத்தா?

இது ஒருபுறம் இருக்க, மஹத் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப் படுகிறார் என்கிறார்கள் சிலர். காரணம் மஹத் என்பதால் தான் ஜனனியிடம் இந்த அதிர்ச்சி என்பது அவர்களது வாதம். அதோடு, வெளிச்சத்தில் உஷாராக இருக்கும் மஹத், பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்குவதில்லை. கமல் கூறியது போன்ற இருட்டில் நடக்கும் சில்மிசங்களை பிக் பாஸால் குறும்படமாக ஒளிபரப்பவும் முடியாது. எனவே, அவர் தான் இன்று வெளியேற்றப் படுவார் என்கிறார்கள்.