கட்சிக் கொடி, தலைவர்கள் படங்கள் விற்பனை; கருணாநிதியை பார்க்கவே கடை தொடங்கினேன்- திமுக தொண்டர் நெகிழ்ச்சி

0
0

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்கவே கட்சிக் கொடி, தலை வர்களின் படங்களை விற்கும் கடையை தெடாங்கினேன் என்று அவரது தீவிர தொண்டர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (52). திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக பொதுக்கூட்டங்கள் நடக் கும் இடங்களிலும் இவரைப் பார்க்கலாம். திமுக கொடி, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் படங் களை விற்கும் கடையை விரித்தி ருப்பார்.

இதுபற்றி பாஸ்கர் கூறிய தாவது: பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திமுகவில் இணைந்துவிட்டேன். இலங் கைத் தமிழர்கள் பிரச்சினை யில் கருணாநிதி எடுத்த நட வடிக்கைகள், போராட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது மேடைப் பேச்சு மிக வும் பிடித்துப் போனதால், அறி வாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சி களில் ஆர்வமாக பங்கேற்பேன். முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம் அண்ணா, கரு ணாநிதி, ஸ்டாலின் போன்ற தலைவர்களின் படங்களை அங்குள்ள தொண்டர்கள் கேட் பார்கள். அதைப் பார்த்ததும் நாமே இவற்றை வாங்கி வந்து விற்கலாமே என்ற எண் ணம் தோன்றியது. தினமும் தலை வரைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று நினைத்து வியாபாரத்தை தொடங்கி விட்டேன்.

அறிவாயத்தில் மட்டுமின்றி தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி கள், கூட்டங்கள் நடக்கும் இடங் களிலும் கொடி, படங்களை விற்பனை செய்வேன். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் கடை வைத்து விற்பனை செய் துள்ளேன். கடந்த 27-ம் தேதி நள்ளிரவு கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்று அறிந்ததும் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தேன். 2 நாட்களாக வீட் டுக்கு செல்லாமல் இங்கேயே (மருத்துவமனை வளாகத்தி லேயே) சுற்றித் திரிந்தேன். தற்போது, அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.