கடைசி காலத்தில் கருணாநிதியை சிரிக்க வைத்த ‘மகிழன்’ | Arulnithi’s son was Karunanidhi’s source of joy

0
0

சென்னை: கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்தது நடிகர் அருள்நிதியின் மகன் மகிழன் தான்.

ஓய்வில்லாமல் உழைத்து வந்த கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்தார். அவர் பெரும்பாலும் வெளியே வரவில்லை.

ஓடிக் கொண்டே இருந்த கால்கள் ஓய்வில் இருந்தபோது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது அவரின் கொள்ளுப்பேரன் மகிழன்.

மகிழன்

உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்த கருணாநிதிக்கு வீட்டில் மகிழ்ச்சியை அளித்தவர் நடிகர் அருள்நிதியின் மகன் மகிழன் தான். மகிழனுடன் கருணாநிதி வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலானது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கருணாநிதியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளான் மகிழன்.

கருணாநிதி

கருணாநிதி

மகன் மு.க. தமிழரசுவின் பேரனான 2 வயது மகிழனுடன் தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது விளையாடி மகிழ்ந்துள்ளார் கருணாநிதி. வீட்டோடு முடங்கிய கருணாநிதிக்கு மகிழனால் பொழுது போயுள்ளது. மகிழனுடன் விளையாடியதால் கருணாநிதி உற்சாகமாக காணப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகிழன்

மகிழன்

கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது தமிழரசுவின் மனைவி மகிழனை தூக்கிக் கொண்டு வந்தார். கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்தான். கருணாநிதி இறந்தது புரியாத வயதில் மகிழன் அவரின் புகைப்படத்தை பார்த்து சிரித்து அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டது.

இன்பம்

இன்பம்

பெயருக்கு ஏற்றது போன்றே கொள்ளுத்தாத்தாவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளான் மகிழன். கருணாநிதிக்கு எத்தனையோ தோழர்கள் இருந்தபோதிலும் கடைசி காலத்தில் அவருக்கு கொள்ளுப் பேரன் தான் உற்ற தோழனாக இருந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.