கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: இன்றும் 13-ம் தேதியும் மீண்டும் நடைபெறும்

0
1

சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி சென்னையில் நேற்று காலை நடைபெற்றது. இன்றும் வரும் 13-ம் தேதியும் மீண்டும் ஒத் திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

முன்னதாக இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் போலீஸார் ஈடுபடுவார்கள். அதன்படி 3 நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். முதல் கட்டமாக நேற்று காலை 6.30 மணிக்கு கோட்டை அமைந்துள்ள ராஜாஜி சாலையில் ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதைப் போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதேபோன்று இன்றும் வரும் 13-ம் தேதியும் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நேரமான காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அப்பகுதியைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நிகழ்ச்சி முடிந்த பின்னர் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். கடந்த முறை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறப்புக் காவலர்கள் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். இந்த முறை கேரளாவைச் சேர்ந்த சிறப்பு காவல்துறையினர் கலந்து கொண்டு ஒத்திகையில் பங்கேற்றதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.